அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஒரு பெண் பாதுகாப்புப் படை அதிகாரி உயிரிழந்தார். மற்றொரு பாதுகாப்பு வீரர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்தை அடுத்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது குடியேற்றக் கொள்கையை மறுசீரமைப்பதாக அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக, அங்கீகரிக்கப்படாத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் வெளிநாட்டினர் மீதான பாதுகாப்புச் சோதனைகளைத் தீவிரப்படுத்துவது ஆகியவை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ட்ரம்ப் நிர்வாகம் அனைத்து நாடுகளையும் சேர்ந்தவர்களுக்கான புகலிட விண்ணப்பங்களை இடைநிறுத்தம் செய்துள்ளது. இந்த நிறுத்தம், அனைத்து புகலிடக் கோரிக்கைகளையும் பரிசீலிப்பதைத் தற்காலிகமாக நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடி வரவு சேவைகளின் (USCIS) இயக்குநர் ஜோசப் எட்லோ, “ஒவ்வொரு வெளிநாட்டவரும் முழுமையாக சரிபார்க்கப்பட்டு, பாதுகாப்பு ரீதியாக பரிசோதிக்கப்படுவதை உறுதிசெய்யும் வரை, புகலிட கோரிக்கைகளின் இடைநிறுத்தம்…
Author: இணையதளச் செய்திப் பிரிவு
கனடாவின் பிராம்டன் நகரில், மேக் லாக்லின் சாலை மற்றும் ரீமெம்பரன்ஸ் சாலை சந்திக்கும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில், கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். ஆனால், மேல்தளத்தில் வசித்த 4 பேர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். இதில், நிறைமாத கர்ப்பிணியான ஆரஷ்வீர் கவுர் என்பவர் உயிர் பிழைக்க ஜன்னலிலிருந்து கீழே குதித்தார். அவர் படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். எனினும், அவரது கருவிலிருந்த குழந்தை இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தீயில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், லூத்தியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும், தீ விபத்தில் காயமடைந்த ஒரு சிறுவன் உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா சமீபத்தில் கனடாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்கள் மீது கடுமையான புதிய வரிகள் விதித்துள்ளது. இந்த நடவடிக்கை கனடா பொருளாதாரத்திற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், மொத்தத்தில் 50 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பிரதமர் மார்க் கார்னி எச்சரித்துள்ளார். குறிப்பாக தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, எரிசக்தி மற்றும் வேளாண்மை போன்ற துறைகள் அதிகமாக பாதிக்கப்படலாம் என அரசு கணிக்கிறது. இதன் விளைவாக, கனடாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (GDP) குறையக்கூடும் என்ற கவலையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் கார்னி, இந்த வரிகள் கனடாவின் தொழிலாளர்கள், குடும்பங்கள் மற்றும் நிறுவனம் அனைத்துக்கும் நேரடி இழப்பை ஏற்படுத்தும் எனவும், பொருளாதாரத்தை பாதுகாக்க விரைவில் மாற்று நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார். கனடா–அமெரிக்கா வர்த்தக உறவுகள் பல ஆண்டுகளாக வலுவாக இருந்தபோதிலும், இத்தகைய வரி நடவடிக்கைகள் இரு நாடுகளின் ஒத்துழைப்பை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். இந்த சூழ்நிலையை சமாளிக்க,…
பிரித்தானியாவுக்கு பயணம் செய்ய திட்டமிடும் கனேடியர்கள் இனிமேல் பயண அனுமதி இல்லாமல் நாட்டில் நுழைய முடியாது என்று பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. 2026 பிப்ரவரி 25ஆம் தேதி முதல், கனேடிய பிரஜைகள் முன்கூட்டியே Electronic Travel Authorization (ETA) எனப்படும் பயண அனுமதியை பெற்றிருக்க வேண்டும். இந்த அனுமதிக்கான கட்டணம் 30 கனேடிய டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ETA-வை U.K. eTA app மூலம் அல்லது இணைய வழியாக விண்ணப்பித்து பெற முடியும். இதே சமயம், இந்த விதிமுறைகள் இரட்டைக் குடியுரிமை கொண்ட கனேடியர்களுக்கு பொருந்தாது. கனேடிய மற்றும் பிரித்தானிய இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் பிரித்தானியாவுக்கு நுழைய பிரித்தானிய பாஸ்போர்ட் அல்லது ‘certificate of entitlement’ ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மும்பை: இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதால் இரு குடும்பங்களும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில், மாப்பிள்ளை பலாஷ் முச்சல்லின் தாயார் அமிதா முச்சல் மௌனத்தை உடைத்து உருக்கமான விளக்கமொன்றை வழங்கியுள்ளார். “ஸ்மிருதியும் பலாஷும் இப்போது மிகுந்த மன வேதனையில் உள்ளனர்,” என அவர் கூறியுள்ளார். இதே நேரத்தில், பலாஷ் முச்சலைச் சுற்றி பரவும் ஒரு புதிய வதந்தி சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. சாங்லியில் ஸ்மிருதி–பலாஷ் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் திருமணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு அறிகுறிகள் தென்பட்டதால் அவர் அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் மனஅழுத்தம் காரணமாக பலாஷும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இருவரும் தற்போது நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த சூழலில் பேசிய பலாஷின் தாய் அமிதா முச்சல், “என் மகன் தனது மணப்பெண்ணுடன் வீட்டிற்கு வரும் நாளை நான் ஆவலுடன்…
மும்பை: தென்னாப்பிரிக்காவிடம் 0–2 என்ற கணக்கில் தொடரை இழந்ததையடுத்து, இந்திய அணியின் தோல்விக்கு மூத்த வீரர்கள் நீக்கப்பட்டதே காரணமா என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. இதை முன்னிட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் தனது வருத்தத்தையும் குற்றச்சாட்டையும் வெளிப்படுத்த, முன்னாள் கிரிக்கெட் நாயகன் சுனில் கவாஸ்கர் அதற்கு நேரடியான பதிலடி கொடுத்து விவாதத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளார். கவுதம் கம்பீர் தலைமையாக்கப்பட்டபின், டெஸ்ட் அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகிய அனுபவ வீரர்கள் பக்கத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், இளம் அணியுடன் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் சரணடைந்தது. இதனால் “அவர்களை நீக்கவில்லை என்றால் நிலைமையே வேறாக இருந்திருக்கும்” என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தனது யூடியூப் சேனலில் அஸ்வின், “எதிர்காலம் குறித்து எந்த தெளிவும் வழங்கப்படவில்லை. அதனால் நாங்கள் தனிப்பட்ட முறையில் ஓய்வு முடிவு எடுக்க நேர்ந்தது,” என்று கூறினார். “சரியான திட்டம் இருந்திருந்தால், கோலி இளம் வீரர்களை உருவாக்கியிருப்பார்;…
மும்பை: தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் தொடரை இழந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறிய கருத்துகள் பிசிசிஐ நிர்வாகத்தை கடும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைக்கு அவருக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுக்கப்படாதாலும், 2026–ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை அவரது பயிற்சிப் பதவிக்கான ‘இறுதி சோதனை’ என பிசிசிஐ பார்க்கிறது. இந்தியா, கொல்கத்தா மற்றும் கவுகாத்தி போட்டிகளில் மோசமாக விளையாடி 0–2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. குறிப்பாக கொல்கத்தா டெஸ்டில் சுழற்பந்து ஏற்ற ஆடுகளத்தில் இந்திய அணி 93 ரன்களுக்குத் துவண்டது. அந்த முதல் டெஸ்ட் முடிந்தபின், “இந்த மாதிரி ஆடுகளத்தையே நாங்களே கேட்டோம்; அது நம்மை சொல்லாமல் வெளிப்படுத்திவிட்டது. சரியாக விளையாடாதால் இப்படிதான் நடக்கும்,” என கம்பீர் வெளிப்படையாக தெரிவித்தது பிசிசிஐக்கு பிடிக்கவில்லை.“சொந்த மண்ணிலேயே அணியை சிரமத்தில் ஆழ்த்தும் பிட்ச் கேட்டுக் கொண்டதென்ன? அதிலும் தோற்ற பிறகு பெருமையாகச் சொல்லுவது எதற்காக?” என…
அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள 79 இந்திய அமைப்புகளை ஒருங்கிணைக்கும் IndUS Canada Forum, வெளிநாட்டு இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை (Dual Citizenship) வழங்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமைப்பின் தலைவர் விக்ரம் பாஜ்வா, இரட்டை குடியுரிமை என்பது நிர்வாக மாற்றம் மட்டுமல்ல; இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை உயர்த்தும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட சீர்திருத்தம் எனக் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் 80 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்ந்து வருவதாக வெளிநாட்டு அமைச்சகத்தின் தரவுகளை மேற்கோள் காட்டிய அவர், அவர்களின் நிதி வலிமை, திறமை, தொழில்முறை அனுபவம் போன்றவற்றை இந்தியா முழுமையாகப் பயன்படுத்த முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். இஸ்ரேல், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இரட்டை குடியுரிமை வழங்கி பொருளாதார மற்றும் தூதரக பலத்தை உயர்த்தி வருவதாக அவர் எடுத்துக்காட்டினார். “இந்த நாடுகள் தங்கள் புலம்பெயர் மக்களை தேசிய வளர்ச்சிக்காகப் பயன்படுத்துகின்றன. அப்படியிருக்க, இந்தியா ஏன்…
கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் நடவடிக்கையாக, “சி-3” எனப்படும் புதிய குடியுரிமை திருத்தச் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா 2026 ஜனவரி மாதத்தில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், இது 2009 ஆம் ஆண்டில் அமலாக்கப்பட்ட ‘கனடா குடியுரிமை வாரிசுரிமை சட்டம்’ மீது எழுந்த குற்றச்சாட்டுகளைச் சரிசெய்யும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2009 சட்டத்தின் கீழ், கனடாவில் பிறந்துவிட்டு வெளிநாட்டில் வசித்து வரும் கனேடியர்களின் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு கனடா குடியுரிமை வழங்கப்படாமல், அது கட்டுப்படுத்தப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. இந்த பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், 2024 மே மாதத்தில் “சி-3” திருத்தச் சட்டமூலத்தை அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்தது. இந்த புதிய திருத்தம், கனேடிய குடிமக்களின் வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கான குடியுரிமை உரிமைகளில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலை திருமணம் செய்ய இருந்த நிலையில், நிகழ்வுகள் எதிர்பாராத மாற்றத்தை சந்தித்துள்ளன. நேற்று நடைபெறவிருந்த திருமணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. காரணம் — ஸ்மிருதியின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதன் பின்னர், பலாஷ் முச்சலும் மன அழுத்தத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்களை கவலையடையச் செய்தது. பலாஷின் தாயார் தெரிவித்ததாவது: அதிக மன அழுத்தம் காரணமாக பலாஷின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் ட்ரிப், ECG உட்பட தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவர் தற்போது வீடு திரும்பியுள்ளாலும், உணர்ச்சி ரீதியாக இன்னும் பாதிப்பில் உள்ளார். திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது இருவரின் மனநிலையையும் குலைத்துள்ளது என்று கூறினார். இந்த சூழ்நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைதள கணக்குகளில் இருந்து திருமணத்துக்கு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை அனைத்தையும் நீக்கியுள்ளார். தந்தை மற்றும் மணமகனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், திருமண நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட…
இந்தியா–தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக சிரமத்தை எதிர்கொண்டுவருகிறது. முதல் டெஸ்டை இழந்த இந்தியா, தற்போது நடைபெறும் இரண்டாவது போட்டியிலும் மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில், பேட்டிங் வரிசை மாற்றம் குறித்து பேசப்படும் போது வாஷிங்டன் சுந்தர் கவனம் ஈர்த்துள்ளார். முதல் டெஸ்டில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் 3-வது இடத்தில் களமிறக்கப்பட்டார். ஆனால் இரண்டாவது டெஸ்டில் 8-வது இடத்தில் பேட்டிங் செய்த அவர், சிறப்பாக 48 ரன்கள் எடுத்த பின்னர் ஆட்டமிழந்தார். பேட்டிங் வரிசையில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களைப் பற்றி கேட்கப்பட்டபோது, சுந்தர் பதிலளித்தது பின்வருமாறு: “அணி என்னை எந்த இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறதோ, எந்த சூழ்நிலையில் விளையாடச் சொல்கிறதோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். இது ஒரு அணிக் விளையாட்டு. அணிக்காக தேவையான வேலையைச் செய்ய எப்போதும் தயாராக இருப்பதே என் நோக்கம். உண்மையைச் சொன்னால், எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு ரோலும் ஒரு புதிய அனுபவம். பலருக்கு…
இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 201 ரன்களில் சரிந்து 288 ரன்கள் பின்தங்கியுள்ளது. போட்டியின் சூழ்நிலையை கவனிக்காமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தாக்குதல்மிகு அணுகுமுறையுடன் விளையாடி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர். குறிப்பாக யான்செனின் பவுன்சர்களை சமாளிக்க முடியாமல் அசைந்தனர். இந்த சூழ்நிலையில், இந்திய பேட்ஸ்மேன்களின் டெஸ்ட் போட்டிக்கான அடிப்படை மனநிலை மற்றும் அணுகுமுறையே மிஸ்சிங் என முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கடுமையாக விமர்சித்துள்ளார். கும்ப்ளே கூறியதாவது: “இந்தியாவின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் தேவையான பொறுமையும், ‘அப்ப்ளிக்கேஷன்’-வும் தெளிவாக காணப்படவில்லை. சில உயர்தர பந்துகள் வீசப்பட்டாலும், பேட்ஸ்மேன்கள் கடினமான ஸ்பெல்ல்களை சமாளிக்கும் மனப்பக்குவம் காணவில்லை. செஷன் வாரியாக விளையாட வேண்டிய அவசியத்தை அவர்கள் உணரவில்லை. 489 ரன்களை ஒரே சமயத்தில் ‘வேகமாக’ அடைய நினைத்ததே தவறு. டெஸ்ட் போட்டியில் அது பொருந்தாது.…