கனடா தீ விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு – நிறைமாத கர்ப்பிணி ஜன்னலிலிருந்து குதித்து உயிர் தப்பினார்; கருவிலிருந்த குழந்தை இறந்தது

கனடா தீ விபத்தில்

கனடாவின் பிராம்டன் நகரில், மேக் லாக்லின் சாலை மற்றும் ரீமெம்பரன்ஸ் சாலை சந்திக்கும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில், கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். ஆனால், மேல்தளத்தில் வசித்த 4 பேர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர்.

இதில், நிறைமாத கர்ப்பிணியான ஆரஷ்வீர் கவுர் என்பவர் உயிர் பிழைக்க ஜன்னலிலிருந்து கீழே குதித்தார். அவர் படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பினார். எனினும், அவரது கருவிலிருந்த குழந்தை இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தீயில் உயிரிழந்தவர்கள் அனைவரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், லூத்தியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

மேலும், தீ விபத்தில் காயமடைந்த ஒரு சிறுவன் உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net