கனடாவின் புதிய குடியுரிமை சட்டம்: சி-3 திருத்த மசோதா 2026 ஜனவரியில் அமலுக்கு

கனடாவின் புதிய குடியுரிமை சட்டம்

கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் நடவடிக்கையாக, “சி-3” எனப்படும் புதிய குடியுரிமை திருத்தச் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா 2026 ஜனவரி மாதத்தில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், இது 2009 ஆம் ஆண்டில் அமலாக்கப்பட்ட ‘கனடா குடியுரிமை வாரிசுரிமை சட்டம்’ மீது எழுந்த குற்றச்சாட்டுகளைச் சரிசெய்யும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2009 சட்டத்தின் கீழ், கனடாவில் பிறந்துவிட்டு வெளிநாட்டில் வசித்து வரும் கனேடியர்களின் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு கனடா குடியுரிமை வழங்கப்படாமல், அது கட்டுப்படுத்தப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. இந்த பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், 2024 மே மாதத்தில் “சி-3” திருத்தச் சட்டமூலத்தை அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்தது.

இந்த புதிய திருத்தம், கனேடிய குடிமக்களின் வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கான குடியுரிமை உரிமைகளில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net