அமெரிக்கா சமீபத்தில் கனடாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்கள் மீது கடுமையான புதிய வரிகள் விதித்துள்ளது. இந்த நடவடிக்கை கனடா பொருளாதாரத்திற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், மொத்தத்தில் 50 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பிரதமர் மார்க் கார்னி எச்சரித்துள்ளார்.
குறிப்பாக தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, எரிசக்தி மற்றும் வேளாண்மை போன்ற துறைகள் அதிகமாக பாதிக்கப்படலாம் என அரசு கணிக்கிறது. இதன் விளைவாக, கனடாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (GDP) குறையக்கூடும் என்ற கவலையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் கார்னி, இந்த வரிகள் கனடாவின் தொழிலாளர்கள், குடும்பங்கள் மற்றும் நிறுவனம் அனைத்துக்கும் நேரடி இழப்பை ஏற்படுத்தும் எனவும், பொருளாதாரத்தை பாதுகாக்க விரைவில் மாற்று நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
கனடா–அமெரிக்கா வர்த்தக உறவுகள் பல ஆண்டுகளாக வலுவாக இருந்தபோதிலும், இத்தகைய வரி நடவடிக்கைகள் இரு நாடுகளின் ஒத்துழைப்பை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
இந்த சூழ்நிலையை சமாளிக்க, கனடா அரசு புதிய வர்த்தக கூட்டாளிகளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
அதே சமயத்தில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரி சுமையை குறைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளது. புதிய வரி அறிவிப்புகள் கனடா மக்களும் தொழில்துறைகளும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் சிறு, நடுத்தர தொழில்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
