சீனாவுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டு: கலிஃபோர்னியாவில் பெண் கைது

சீனாவுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டு

சீனாவுக்காக உளவு பார்த்ததாகக் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 34 வயதுடைய வான்யிங் சாங் என்ற பெண் மீது அமெரிக்கா உளவு குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.

லாஸ் ஏஞ்சலஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சீனாவுக்குப் புறப்பட முயன்ற அவரை அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு வேவு முகவராகப் பதிவு செய்யாமல் சட்டவிரோதமாகச் செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் கடந்த ஆண்டு சியட்டல் நகருக்குச் சென்று, தைவான் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினரைக் கண்காணித்ததாக அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, அமெரிக்காவில் வசித்து வரும் தைவான் அதிபர் லாய் சிங் டீயின் மகன் மற்றும் அவரது குடும்பத்தினரை இவர் உளவு பார்த்ததாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

தைவான் அதிபரின் மகனுடைய இல்லம், பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட முக்கியத் தகவல்களைச் சேகரித்து, அவற்றை அவர் சீனாவுக்கு அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.