கனடாவின் ஸ்கார்பரோ பகுதியில் தமிழருக்குச் சொந்தமான நகைக்கடை ஒன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அந்நாட்டுப் போலீசார் தெரிவித்துள்ளனர். அங்குள்ள ஜெயசாயி நகைக்கடையைக் குறிவைத்து நேற்று அதிகாலை வேளையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின்போது குண்டுகள் பாய்ந்ததில் கடையின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவம் நள்ளிரவு வேளையில் நிகழ்ந்ததால், கடையில் பணியாளர்கள் யாரும் பணியில் இருக்கவில்லை. இதனால் எவ்வித உயிர்ச்சேதமும் இன்றி பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்கத் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
