தந்தை–காதலர் உடல்நிலை பாதிப்பு: ஸ்மிருதி மந்தனா சமூக வலைதளங்களில் இருந்து திருமண பதிவுகள் நீக்கம்

பகிர்
WhatsApp Google News Facebook Post Telegram

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலை திருமணம் செய்ய இருந்த நிலையில், நிகழ்வுகள் எதிர்பாராத மாற்றத்தை சந்தித்துள்ளன.

நேற்று நடைபெறவிருந்த திருமணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. காரணம் — ஸ்மிருதியின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதன் பின்னர், பலாஷ் முச்சலும் மன அழுத்தத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்களை கவலையடையச் செய்தது.

ஸ்மிருதி மந்தனா
படம்: தந்தை–காதலர் உடல்நிலை பாதிப்பு: ஸ்மிருதி மந்தனா சமூக வலைதளங்களில் இருந்து திருமண பதிவுகள் நீக்கம்

பலாஷின் தாயார் தெரிவித்ததாவது:

அதிக மன அழுத்தம் காரணமாக பலாஷின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் ட்ரிப், ECG உட்பட தேவையான பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவர் தற்போது வீடு திரும்பியுள்ளாலும், உணர்ச்சி ரீதியாக இன்னும் பாதிப்பில் உள்ளார். திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது இருவரின் மனநிலையையும் குலைத்துள்ளது என்று கூறினார்.

இந்த சூழ்நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைதள கணக்குகளில் இருந்து திருமணத்துக்கு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை அனைத்தையும் நீக்கியுள்ளார்.

தந்தை மற்றும் மணமகனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், திருமண நிகழ்ச்சி நிறுத்தப்பட்ட நிலையில், சமூக வலைதள பதிவுகளை அகற்றிய நடவடிக்கை கவனத்தை ஈர்த்துள்ளது.

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்