இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் T20 போட்டி தம்புலா மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. போட்டியின் முக்கிய தருணங்கள்: வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசங்கா (11 ரன்) மற்றும் குசால் மென்டிஸ் (19 ரன்) சீக்கிரம் விக்கெட்களை இழந்தனர். அசலங்கா (59 ரன்) மற்றும் கமிந்து மென்டிஸ் (51 ரன்) சிறப்பாக ஆடி இலங்கை அணிக்கு ஒரு ஆதரவை ஏற்படுத்தினர். இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் முழு விவரம்: அணி விவரங்கள், போட்டி அட்டவணை மற்றும் நேரலை விவரங்கள் வெஸ்ட் இண்டீஸின் அபார விளையாட்டு: வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரான்டன் கிங் (63…
Author: இணையதளச் செய்திப் பிரிவு
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக வலம் வரும் ரோஹித் சர்மா, உலகளாவிய அளவில் தன் பேட்டிங் திறமையால் புகழ்பெற்றுள்ளார். 60 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 45 ரன்கள் சராசரியுடன் 12 சதங்கள் மற்றும் 17 அரை சதங்களைப் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளிலும் தன் முத்திரையை பதித்த ரோஹித், பல தரப்புகளிலும் மேன்மை பெற்றவர். ஆனால், வங்கதேச அணிக்கு எதிராக மட்டும் அவர் தன் நிலையை நிலைநிறுத்த முடியாத ஒரு மோசமான நிலையைச் சந்தித்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் சராசரி மிகக் குறைவு. 7.85 என்ற கேலிக்குரிய சராசரியுடன், அவர் இந்த அணிக்கு எதிராக சாதனை படைக்க தவறியுள்ளார். தற்போதைய சென்னை டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் அவர் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ஆட்டத்தை இழந்தார். முதல் இன்னிங்ஸில் 6 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 ரன்களும் மட்டுமே சேர்த்தார். இது போன்ற…
வங்கதேசத்திற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் தோற்றது. இதனால் பாகிஸ்தான், வங்கதேசத்திற்கு எதிராக முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் பரிதாபமாக தோல்வியடைந்தது. முன்னதாக, அண்டை நாடாக இருப்பதால் இந்தியாவை விட பாகிஸ்தான் சிறந்த அணியாக உள்ளது என்று அந்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் பெருமைப்படுவது வழக்கமாகும். அதற்கு மேல், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு அணியான சாகின் அப்ரிடி, நாசீம் ஷா, ஹரிஷ் ரவூப் ஆகியோர் உலகின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களாக உள்ளனர் என்று அவர்கள் பெருமைப்படுவார்கள். இதனால் 2021 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பைகளில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று சோயப் அக்தர் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் இடையிலான பேட்டிகளில் கூறி வந்தனர். ஆனால், இந்திய அணி அவர்கள் எதிர்பார்த்ததை முறியடித்து, 2022 டி20 உலகக் கோப்பையும், 2023 ஆசியக் கோப்பையும் வென்று சாதனை படைத்தது. அதேபோல், உலகக்கோப்பையில்…
2011 ஒருநாள் உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா நீக்கப்பட்டமைக்கு அப்போதையை கேப்டன் டோனியே காரணம் என, தேர்வு குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ராஜா வெங்கட் தெரிவித்து உள்ளார். 2007 டி20 உலகக் கோப்பை, 2009 மற்றும் 2010 டி20 உலகக் கோப்பை அணிகளில் இடம் பெற்று இருந்த ரோஹித் சர்மா 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் மாற்று வீரராகவாவது இடம் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அத்துடன், தேர்வு குழுவினரும் ரோஹித் சர்மாவை 15 வது வீரராக அணியில் சேர்த்து இருந்த நிலையில், கேப்டன் தோனி 15 வது வீரராக சேர்க்கப்பட்டிருந்த ரோஹித் சர்மாவை நீக்க சொல்லிவிட்டு, பியூஷ் சாவ்லா பெயரை சேர்க்குமாறு தேர்வு குழுவினரிடம் கூறி உள்ளார். தோனியின் இந்த தீர்மானத்தை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனும் ஏற்றுக்கொண்டதால், வேறு வழி இன்றி தேர்வுக் குழுவினர் ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு பியூஷ் சாவ்லாவை சேர்த்தனர். இந்த தகவலை ராஜா…
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் , 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் செப்டம்பர் 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அவர் விளையாட உள்ளார். உத்தரபிரதேசத்தின் முகமது அமான் அணியின் கேப்டனாக செயற்பட உள்ளதுடன், செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7 ஆகிய தேதிகளில் தொடங்கும் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணிக்கு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சோஹம் பட்வர்தன் கேப்டனாக செயற்பட உள்ளார். வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டரான சமித் டிராவிட், பெங்களூருவில் நடைபெற்று வரும் KSCA மகாராஜா T20 கோப்பையில் மைசூர் வாரியர்ஸ் அணியில் விளையாடுகின்றார். இதுவரை 7 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள இவர், அதிகப்ட்சமாக 33 ரன்கள் உள்ளடங்களாக 82 ரன்கள் எடுத்துள்ளார். 7 இன்னிங்ஸ்கள் விளையாடி வெறும்…
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஜோ ரூட் டெஸ்ட் வரலாற்றில் புது வரலாறு படைத்துள்ளார். இங்கிலாந்து அணி தற்போது இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. இதில் இரு அணிகளும் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சிலும் தனி ஆளாக போராடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். அவர் 103 ரன்கள் எடுத்து கடைசி ஆளாக அவுட்டானார். ஒரே டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தியதுடன், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்து விளாசியவர் என்ற புதிய வரலாறு படைத்துள்ளார். 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்காக தனது 34வது சதத்தை நேற்று விளாசி இந்த புதிய சகாப்தத்தை ஜோ ரூட் படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் 33 சதங்களுடன்…