இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பிரிஸ்பேனில் மோதிய 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன் குவித்தது. பின்னர் இந்திய அணி நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்து இருந்தது. கே.எல். ராகுல் 84 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 77 என்னும் எடுத்தனர். ஜஸ்பிரீத் பும்ரா 10 ரன்னும், ஆகாஷ் தீப் 27 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்த டெஸ்டில் 2-ம் நாள் ஆட்டத்தை தவிர எஞ்சிய 3 நாட்களும் மழையால் பாதிக்கப்பட்டது. முதல் நாளில் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இன்று 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. 193 ரன்கள் பின்தங்கி, கைவசம் 1 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் கடைசி விக்கெட் சரிந்தது. இந்திய அணி 78.5 ஓவரில் 260…
Author: இணையதளச் செய்திப் பிரிவு
அஸ்வின் ஓய்வு இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் 2ஆவது நாள் மட்டுமே முழுமையாக நடைபெற்றது. ஏனைய 4 நாட்களுமே மழையால் அடிக்கடி பாதிக்கப்பட்டதுடன், இன்று 5ஆவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ஆட்டம் சமனிலையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததுடன், சக வீரர்களுக்கும் பிசிசிஐக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதுடன், மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காபாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செய்தியாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்திய அணி பேட்டிங் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பும்ரா, “நீங்கள் என் பேட்டிங் திறமை பற்றி கேள்வி எழுப்பியுள்ளீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் நான் தான். இதுபற்றி கூகுளை பயன்படுத்தி அறிந்துகொள்ளுங்கள்” என்றார். இதற்கு பதிலளித்துள்ள, கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை எக்ஸ் தள பதிவில், “நான் கூகுள் செய்தேன். கம்மின்ஸ் பந்தில் சிக்சர் விளாசுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு நிச்சயம் பேட்டிங் தெரியும். ஆகாஷ் தீப் உடன் இணைந்து ஃபாலோ ஆன்-ஐ தடுத்த விதம் நன்றாக இருந்தது “…
காதலிக்க நேரமில்லை லாவண்டர் நேரமே பாடல் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் காதலிக்க நேரமில்லை படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ளது. ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலான `என்னை இழுக்குதடி’ சில வாரங்களுக்கு முன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான லாவண்டர் நேரமே நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு புதுப்போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
விடாமுயற்சி இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி. அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜூன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார். கடந்த மாதம் யாரும் எதிர்பாராத நேரத்தில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில், இன்னும் 7 நாட்களுக்கான படப்பிடிப்பு பணிகள் மீதி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படக்குழு சில புகைப்படங்களை இணையத்தில் பதிவுட்டுள்ளனர். அதில் அஜித் மிகவும் ஸ்டைலாக டக்சிடோ கோட் சூட் அணிந்து நடந்து வருகிறார். மற்றொரு புகைப்படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனி, அஜித், திரிஷா, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இருக்கின்றனர். இந்த…
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ராகுல் 84 ரன்னிலும் ஜடேஜா 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து இந்தியா பால் ஆனை தவிர்க்க போராடியது. கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா- ஆகாஷ் தீப் பொறுப்புடன் ஆடினர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் பாலோ ஆனை தவிர்க்க 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆகாஷ் தீப், தேர்ட் மேன் திசையில் பந்தை அடித்த நிலையில், அது பவுண்டரியாக மாறியது. இதனால், இந்திய அணி பாலோ ஆனை தவிர்த்ததால், ஓய்வு அறையில் இருந்த கவுதம் கம்பீர், விராட் கோலி சந்தோசத்தில் துள்ளி குதித்தனர். பாலோ ஆனை தவிர்க்கவில்லை என்றால் ஆஸ்திரேலியா இந்தியாவை பேட்டிங் செய்ய அழைக்கும். இதனால் ஒரு நாள் முடிவில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளை வீழ்த்துவது…
மகளிருக்கான டி20 மற்றும் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ஐசிசி இன்று (17) வெளியிட்டுள்ளது. அதன்படி துடுப்பாட்ட தரவரிசையில் இந்தியாவின் மந்தனா ஒருநாள் போட்டியில் 3 இடங்கள் முன்னேறி 2ஆவது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் மந்தனா 2ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், டி20-யில் 1 இடம் முன்னேறி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். அத்துடன், கேப்டன் கவுர் 2 இடங்கள் பின் தங்கி 13ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன், டி20யில் 1 இடம் முன்னேறி 11ஆவது இடத்தில் உள்ளதுடன், மற்றொரு இந்திய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் டி20யில் 6 இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதேவேளை, பந்து வீச்சை பொறுத்த வரையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒருநாள் போட்டியில் 5ஆவது இடத்தையும் டி20 போட்டியில் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி கபாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின்னர், களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினர். இதனால் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், கடந்த சில போட்டிகளாக ரன்களை குவிக்க தடுமாறும் ரோகித் சர்மா இந்த போட்டியிலும் 10 ரன்களுடன் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சிக் கொடுத்தார். இதன்மூலம், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதாவது, டெஸ்ட் போட்டிகளின் போது எதிரணியின் கேப்டனை அதிக முறை வீழ்த்திய கேப்டன் என்ற பட்டியலில் தற்போது…
‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த ஆடுகளத்தன்மை முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இருக்கும் என்று பிட்ச் தலைமை பராமரிப்பாளர் இசாக் மெக்டொனால்டு எச்சரித்துள்ளார். இதனால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு முதல் போட்டியே பெரும் தலைவலியாக இருக்கப்போகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இதில் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் வெறும் 89 ரன்னில் சுருண்டது. அதே சமயம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் ‘பவுன்ஸ்’ பந்துகளில் உடலில் அடிவாங்கினர். குறிப்பாக லபுஸ்சேன் எனது வாழ்க்கையில் விளையாடிய கடினமான பிட்ச் இது தான் என்று அப்போது குறிப்பிட்டார். இந்த நிலையில், இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித்…
மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீரின் பதவிக்கு தற்போது ஒரு மிகப்பெரிய சவால் உருவாகியுள்ளது. இந்திய அணியின் அண்மைய டெஸ்ட் தோல்விகளின் பின்னணியில், பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் வெற்றிகளை வைத்தே அவர் பயிற்சியாளராக தொடர வேண்டுமா என்பது தீர்மானிக்கப்படும். இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில், மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்தியா குறைந்தது நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கடும் நெருக்கடி உள்ளது. நியூஸிலாந்து அணியிடம் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வைட்-வாஷ் செய்யப்பட்டது. இதனால், கம்பீரின் பயிற்சியில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனுடன், அணியின் அண்மைய தோல்விகளும் கம்பீரின் பதவிக்கு பெரும் சிக்கலாக…
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி, படுமோசமாக தோற்ற நிலையில் பலரும் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், இந்திய அணி மூன்று போட்டிகளிலும் தோற்றமைக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை, கடுமையாக சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். கோலி மற்றும் ரோஹித் இருவரும் துலீப் டிராபியில் பங்கேற்க மறுத்ததுதான், தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம் என கவாஸ்கர் கூறியுள்ளார். செப்டம்பர் 5 முதல் 22ஆம் தேதி வரை பெங்களூர் மற்றும் அனந்தபூரில் நடைபெற்ற துலீப் டிராபியில் இந்தியா ஏ, பி, சி, டி ஆகிய அணிகள் பங்கேற்றன. இத்தொடரில் பங்கேற்க ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இணக்கம் வெளியிட்ட நிலையில், கடைசி நேரத்தில் பங்கேற்க முடியாது எனக் கூறி ஓய்வு எடுத்தனர். இதுகுறித்துப் பேசிய கவாஸ்கர், ‘‘இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே கோலி, ரோஹித் சர்மா இருவரும் டெஸ்டில் சிறப்பாக செயல்படவில்லை. அவர்கள் துலீப்…
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 தொடரில் விளையாட உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அண்மையில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகிய சிவம் துபே மற்றும் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மற்றும் ரியான் பராக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வங்கதேச டி20 தொடரில் அறிமுகமாகிய மயங்க் யாதவ் மூன்று சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவ் நான்கு போட்டிகளில் மட்டுமே ஆடி இருந்த நிலையில், காயம் ஏற்பட்டு அணியில் இருந்து விலகி இருந்தார். தற்போது, இந்திய அணியில் வெறும் மூன்று போட்டிகளில் ஆடிய நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், நீண்ட காலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகின்றது. அத்துடன், சிவம் துபேவின் காயம் இன்னும்…