பிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபரை, சத்திஸ்கர் மாநிலக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 54 வயதுடைய சயிஃப் அலி அடையாளம் தெரியாத நபர், கடந்த வியாழக்கிழமை (16 ஜனவரி) அதிகாலை அவரது வீட்டில் வைத்து 6 முறை கத்தியால் குத்தினார். இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று நம்பப்படும் இரண்டாவது சந்தேக நபர் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்ததாக மும்பை காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Author: இணையதளச் செய்திப் பிரிவு
அமெரிக்காவில் Tiktok செயலி மீண்டும் அதன் சேவைகளை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டோனல்ட் டிரம்ப், தாம் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்கர்கள் TikTok சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார். அவரது முயற்சிகளால் அமெரிக்காவில் மீண்டும் சேவைகளை முன்னெடுப்பதாக TikTok அறிவித்துள்ளது. 170 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் TikTok சேவையை பயன்படுத்துவதுடன், 7 மில்லியனுக்கும் அதிகமான சிறிய வரத்தகங்கள் அதனால் பயன்பெறுகின்றனர். தாம் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு TikTok தடையிலிருந்து விலக்கு அளிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஆளும் மிதவாதக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்குப் போட்டியிட எண்ணுவதாக கனடா அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீலண்ட் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் அடுத்த பிரதமராக விரும்புவதாகவும் அவர் தம்முடைய சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ பதவி விலகியதுடன், துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஃப்ரீலண்ட், கடந்த மாதம் பதவி விலகினார். அத்துடன், ட்ரூடோவை வெளிப்படையாகக் குறைகூறிய ஃப்ரீலண்ட், டோனல்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும்போது ட்ரூடோவால் அதனை சமாளிக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார். இதேவேளை, அமெரிக்க மற்றும் கனடாவுக்கு இடையில் வர்த்தகப் பூசல் அதிகரிக்கலாம் என்ற நிலையில், டிரம்ப்புடன் ஃப்ரீலண்ட்டின் உறவு எப்படி இருக்கும் என்பது தெளிவில்லை.
இங்கிலந்தின் டெவொன் மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்யும் ஊழியர் வட்டமான முட்டையொன்றை கண்டுபிடித்தார். அந்தப் பண்ணையில் 3 ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்யும் அலிசன் கிரீன், 42 மில்லியனுக்கும் அதிகமான முட்டைகளை பராமரித்து இருக்கின்றார். ஆனால், இதுவரை இது போன்ற வட்டமான முட்டையைப் பார்த்ததே இல்லை என்று கூறும் கிரீன் அந்த முட்டையை ஏலத்திற்கு அனுப்ப எண்ணியுள்ளார். முட்டையை ஏலத்தில் விற்கும் பணத்தை பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் அமைப்புக்கு நன்கொடையாக வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப்பின் பதவியேற்பு நிகழ்வு உள்ளரங்கில் இடம்பெறவிருக்கிறது. அமெரிக்கத் தலைநகரில் தற்போது நிலவும் ஆபத்தான குளிர் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்னர், 1985ஆம் ஆண்டில்தான் அதிபரின் பதவியேற்புச் நிகழ்வு உள்ளரங்களில் நடந்தது டிரம்ப்பின் பதவியேற்புச் சடங்கில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், அனுமதிச் சீட்டு பெற்ற ஆயிரக்கணக்கான விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த நிகழ்வுக்கு பாதுகாப்பு வழங்க 25,000 காவல்துறையினரும், ராணுவத்தினரும் தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
TikTok செயலியைத் தடை செய்வதற்கு ஆதரவாக அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தேசப் பாதுகாப்புக்கு TikTok ஆபத்து என்று நீதிமன்றத் தீர்ப்பு சொல்வதுடன், அமெரிக்க மக்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் TikTok செயலியை பயன்படுத்துகின்றனர். சீனாவின் ByteDance நிறுவனம் நாளைக்குள் (19 ) TikTok நிறுவனத்தை விற்பனை செய்யவில்லை என்றால், தடை நடைமுறைக்கு வருவதுடன், அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. இந்த நிலையில், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அடுத்த அரசாங்கத்தின் பொறுப்பு என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ள நிலையில், டோனல்ட் டிரம்ப் திங்கட்கிழமை (20) அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கிறார். அவர் நினைத்தால் TikTokஐ விற்பதற்கு 90 நாள்வரை அவகாசம் வழங்க முடியும் என்ற நிலையில், விரைவில் முடிவு சொல்லப் போவதாகத் டிரம்ப் தெரிவித்து இருக்கின்றார்.
ஐ.சி.சி ஆண்கள் ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்சன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னதாக 7ஆவது இடத்திலிருந்த தீக்சன, 663 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 4 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் வீரர் ரஷீத் கான் முதலிடத்திலும், இந்தியாவின் குல்தீப் யாதவ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
2024 ஆண்டின் டிசம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த ஆடவருக்கான விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா வென்றுள்ளார். பரிந்துரை பட்டியலில் ஜஸ்பிரிட் பும்ராவுடன் அவுஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் மற்றும் தென் ஆபிரிக்காவின் டேன் பேட்டர்சன் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தின் போது, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகளில், ஜஸ்பிரிட் பும்ரா 14.22 என்ற சராசரி வீதத்தில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இந்தத் தொடரின் போது அவர் தமது 200வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தினார். 20க்கும் குறைவான சராசரி வீதத்துடன் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆவார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் அடுத்த மாதம் 21-ம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் சாம்பியன்ஸ் டிராபி தொடரை தென் ஆப்பிரிக்க அணி தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்க அணியை பவுமா வழிநடத்துகிறார். இதில் இந்தியாவில் நடந்த ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில பங்கேற்ற 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர், இந்த அணியில் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் போன்றோர் இடம் பெற்றிருந்தனர். டோனியர் டி சோர்சி மற்றும் ரியான் ரிக்கெல்டன் போன்ற புதுமுகங்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த வீரர்கள் தென் ஆப்ரிக்காவின் அணியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி T20 உலக கோப்பைக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக விளங்கிய ரோகித் சர்மா, தற்போது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மோசமாக விளையாடி வருகிறார். கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் 32 ரன்களே அடித்தார், இதனால் அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு, ரோகித் சர்மா ஓய்வு எடுப்பதாக அவர் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் உடன் ஆலோசனை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம், இந்திய கிரிக்கெட் குழுவின் தலைவராக இருந்த ரோகித், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு எடுப்பார்…
கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ விரைவில் பதவி விலகுவார் என்றும் 8 ஜனவரி தேசிய மிதவாதக் கட்சி கூடுவதற்குள் அறிவிப்பு வந்துவிடலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. கட்சிக்குப் புதிய தலைவர் கிடைக்கும் வரை ட்ரூடோ தற்காலிகமாகப் பதவியில் நீடிப்பாரா என்பது தெரியவில்லை. 2015இல் பதவிக்கு வந்த ட்ரூடோ விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் பணவீக்கம் முதலியவற்றால் அண்மைக் காலத்தில் மக்களின் ஆதரவை இழந்துள்ளார். இந்நிலையில் ட்ரூடோ பதவி விலக நெருக்குதல் கூடியுள்ளதுடன், கனடாவில் இவ்வாண்டு அக்டோபர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும். ட்ரூடோ பதவி விலகினால் தேர்தல் விரைவாக நடத்தப்படும் சாத்தியம் அதிகம் உள்ளதுடன், அமெரிக்காவின் அடுத்த அதிபராகும் டிரம்ப்பின் நிர்வாகத்தைச் சமாளிக்கக் கனடா புதிய நிர்வாகத்தை அமைக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்தியா 10 வருடங்களுக்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்துள்ளது. இந்தநிலையில் இந்திய அணியில் கேப்டன் பதவிக்காக ஏற்பட்ட சண்டைதான் இந்த தோல்விக்கு காரணம் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். “சில வதந்திகள் வந்ததை நானும் அறிவேன். நெருப்பு இருக்கும்போது புகையும். சொந்த ஊரில் விளையாடுவது எளிது. வெளிநாட்டில் விளையாடும்போது ஒற்றுமையான அணி முக்கியம். கடந்த சில வாரங்களாக இந்திய அணி தங்களுக்குள்ளேயே நம்பிக்கையை இழந்தார்கள். அப்படி நீங்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இழக்கும்போது தோல்வியின் பக்கத்தில் இருப்பீர்கள். 2 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் நாங்கள் தோற்றோம். தென் ஆப்பிரிக்காவில் நாங்கள் 3 – 0 என்ற கணக்கில் தோற்றோம். அந்த சமயங்களில் எங்கள் அணியில் ஒற்றுமை இல்லை. ஒரு அணி உண்மையாகவும் ஒருவருக்கொருவர் விசுவாசமாகவும்…