Author: இணையதளச் செய்திப் பிரிவு

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.

நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்ததில் இருந்தே நாக சைத்தன்யா தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறார். இதனையடுத்து, சோபிதாவை திருமணம் செய்த பின்னர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான தண்டேல் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் நாகார்ஜுனா இந்த வெற்றிக்கு காரணம் மருமகள் சோபிதா துலிபாலா வந்த நேரம் என்று பேசினார். சந்து மொண்டட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன், ஆடுகளம் நரேன், பப்லு பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 7ம் தேதி தண்டேல் வெளியானது. பாகிஸ்தான் போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளும் மீனவரான நாக சைதன்யாவை மீட்க சாய் பல்லவி நடத்தும் போராட்டம் தான் இந்த தண்டேல் படம். காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், 50 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூத்த மருமகள்…

Read More

கவுதமலாவில் நேற்று முன் தினம் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பாலத்தின் மீது பயணித்த அந்த பஸ், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. 70-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்கு உள்ளானதில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது. எல் ப்ரோக்ரெசோவில் உள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாட்டமலா நகரத்திற்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் பஸ் விபத்துக்கு உள்ளானது. இந்த நிலையில், பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கவுதமலாவில் ஒரு நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஜெர்மனியின் Hamburg நகரில் விரைவு ரயிலுடன் லாரி ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் 6 பேருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. Bremen நகருக்குச் செல்லும் வழியின் தண்டவாளச் சாலை சந்திப்பில் பிப்ரவரி 11 ஆம் தேதி ஜெர்மன் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு இந்த விபத்து நடந்தது. நகரங்களுக்கு இடையிலான அந்த விரைவு ரயிலில் சுமார் 300 பேர் பயணம் செய்த நிலையில், விபத்து குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Read More

அமெரிக்காவின் அரிஸோனாவில் தனியார் விமானமொன்று மற்றொரு விமானத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். விமான நிலையத்தில் தரையிறங்கும்போது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.40 மணியளவில் விபத்து நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தரையிறங்கிய தனியார் விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று தனியார் வளாகத்தில் நின்றுகொண்டிருந்த மற்றொரு விமானத்தின்மீது மோதியது. அமெரிக்க வரலாற்றில் கடந்த இரண்டு வாரங்களில் அடுத்தடுத்து நேர்ந்துள்ள 3 மோசமான விமான விபத்துகளில் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More

ரச்சிதா மகாலட்சுமி நடித்த பாடல் இணையத்தில் புயலைக் கிளப்பி இருக்கும் நிலையில், எனக்கும் கிளாமர் காட்டத் தெரியும் என்பது போல, நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழில் அம்புலி என்கிற படத்தில் நடித்த சனம் ஷெட்டி தொடர்ந்து, மலையாளத்தில் சினிமா கம்பெனி என்ற படத்தில் நடித்தார். 2016ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா பட்டத்தை பெற்றதுடன், பிக்பாஸ தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக மீடியாக்கள் முன் குற்றம் சாட்டினார். பின்னர், நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 64 நாட்கள் இருந்தார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி, கடந்த சில மாதங்களாக அதிக கவர்ச்சி காட்டி போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கான்செட் விளம்பரத்திற்காக வெறும் உள்ளாடையுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், இந்த வீடியோவைப்பார்த்த ரசிகர்கள், ரச்சித்தாவிற்கு போட்டியாக களமிறங்கீட்டீங்களா என கேள்வி கேட்டு…

Read More

சீரியலில் அழகு பதுமையாக புடவை கட்டிக்கொண்டு அறிமுகமான ரச்சிதா மகாலட்சுமி, விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் தங்க மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சீரியலில் நடித்து கொண்டு இருந்த போதே, பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆனார், அந்த வீட்டில் எப்போதும் புடவையில் வலம் வந்த ரச்சித்தா மகாலட்சுமிக்கு என தனி ரசிகர்கள் உருவானார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ரச்சித்தா, இயக்குநர் ஜே எஸ் கே சதீஷ் இயக்கத்தில் ஃபயர் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்‌ஷி அகர்வால், காயத்ரி ஷான், சிங்கம்புலி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து, மெதுமெதுவாய் என்கிற பாடலின் டிரைலர் வெளியானதுடன், அதில் ரச்சித்தா மகாலட்சுமி, வெறும் சட்டை மட்டுமே அணிந்து கொண்டு…

Read More

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் விமர்சன ரீதியாக கடும் சறுக்கலை சந்தித்தது. வழக்கமான அஜித் படம் போல் இல்லாமல், வித்தியாசமாக இருந்ததால் இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்தன. இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளதுடன், விடாமுயற்சி திரைப்படம் நான்கு நாட்களில் 100 கோடியை வசூலித்து உள்ளது. ஆனால் அஜித்தின் படத்திற்கு இந்த வசூல் மிகவும் குறைவானது. படம் வெளியான இரண்டு, மூன்று நாட்கள் மட்டும்தான் படம் பிஸியாக இருந்தது. திங்கட்கிழமை முதல் படத்தின் வசூல் மோசமாக உள்ளது வருத்தம் அளிக்கிறது. விடாமுயற்சி படம் அஜித் நடிப்பதற்கான திரைப்படமே இல்லை. அஜித் ஒரு மாஸ் ஹீரோ, அஜித் எப்படி இந்த கதையை தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. இந்த விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதற்கே பல பிரச்சனைகள், தடைகள் இருந்த போதும், ரசிகர்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருந்தார்கள். மக்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகன்,…

Read More

நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் திரைப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது. தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், தி லெஜண்ட் என தொடர்ந்து பல படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா ஆனந்த் தற்போது சில படங்களில் நடித்து வருவதுடன், யாஷிகா ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Read More

நடிகர் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், இதுவரை 131 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் டிவி ஒளிபரப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளதுடன், விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து, வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தான்டு அன்று விடாமுயற்சி திரைப்படத்தை சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

சீரியல் நடிகையாக இருந்து தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருபவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அவர் நடிப்பில் எக்ஸ்ட்ரீம் என்ற படம் வெளியாகியது. தொடர்ந்து Fire என்ற படத்தில் ரச்சிதா நடித்துள்ளதுடன், படத்தின் மெது மெதுவாய் என்ற பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பாலாஜியுடன் நெருக்கமாக ரச்சிதா நடித்த படுக்கையறை காட்சியை ரசிகர்கள் முகம் சுளித்தனர். இந்நிலையில் கவர்ச் ரோலில் நடிப்பது குறித்து ரச்சிதா மனம் திறந்து பேசியுள்ளார். காசுக்காக அதை பண்ணவில்லை என்றும் அந்த நோக்கமே கிடையாது என்றும் இந்த படத்தில் அதை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார்கள் என்று ரச்சிதா மகாலட்சுமி பேசியுள்ளார்.

Read More

இலங்கையில் இன்று திங்கட்கிழமை மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு தினமும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நாட்டின் தற்போதையை மின் நிலைமையை அடுத்து இந்த மின் தடையை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை கூறியுள்ளது. அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Read More

இயக்குநர் சீமான் இயக்கத்தில் மாதவன் மற்றும் பாவனா நடித்த வாழ்த்துகள் படத்தில் ஒரு ஆங்கில வார்த்தை கூட பயன்படுத்தவில்லை என நடிகை சவிதா ரெட்டி கூறியிருக்கிறார். வாழ்த்துகள் படத்திற்கு டப்பிங் பேசும் போது இந்தப் படத்தில் ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் இல்லை. டப்பிங் தொடங்கும் போது டயலாக் பேப்பர் கொடுத்தார்கள். நான் ரெடியா டேக் போகலாமா என்று கேட்டேன். அதற்கு தயார் என்று உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது. வணக்கம் செல்வி சவிதா என்று சொன்னது யார் என்று திரும்பி பார்த்தேன். அது சீமான். தொடர்ந்து Recording Take என்று சொல்வதற்கு பதிலாக ஒலி பொறியாளர் பதிவு என்று குரல் கொடுத்தார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்று அனைவருமே தமிழில் பேச எனக்கு வியப்பாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More