Author: இணையதளச் செய்திப் பிரிவு

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.

டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை ஏப்ரல் 5ஆம் தேதி வரை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தாமதப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில் கூகுல் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் டிக் டாக் மீண்டும் இடம்பெற்றுள்ளது. 170 மில்லியன் அமெரிக்க பயனீட்டாளர்கள் பயன்படுத்தும் டிக்டாக் செயலி, சீனாவைத தளமாகக் கொண்ட பைட்டான்சுக்குச் சொந்தமானது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று கூறி அச்செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டதுடன், ஜனவரி 19ஆம் தேதிக்குள் அதை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றுவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் அமலாக்கத் தடையை 75 நாள் தாமதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். டிக் டாக் செயலியை பயன்படுத்த அனுமதிக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று டிரம்ப் நிர்வாகம் உறுதியளித்துள்ளதால் பிப்ரவரி 13ஆம் தேதியிலிருந்து கூகல், ஆப்பிள் ஸ்டோர்களிலிருந்து புதிய பயனீட்டாளர்கள் டிக் டாக் செயலியை இறக்குமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மோட்டார் வாகனங்களுக்கு ஏப்ரல் 2 ஆம் திகதி புதிய வரிவிதிப்பை அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை (14) செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியாவில் இயங்கும் பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் அடுத்தடுத்து வரிவிதிப்புகளை அறிவிப்பது, நிலைமையை இன்னும் மோசமடையச் செய்யும். அமெரிக்காவின் பெரிய வர்த்தகப் பங்காளித்துவ நாடுகளான கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே டிரம்ப் 25 சதவீத வரிவிதிப்பை அறிவித்து, பின்னர் மார்ச் வரை அதை நிறுத்தி வைத்துள்ளார்.

Read More

குடியரசு தினத்தை முன்னிட்டு 2025ஆம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு அறிவித்த நிலையில், நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி என தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது. இதற்கிடையில், கவர்னர் ஆர்.என்.ரவி பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க மாட்டார் என, அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

Read More

‘பயர்’ விமர்சனம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் பாலாஜி, அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கத்தில் ‘பயர்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டிகே இசையமைத்துள்ளார். 2020-ம் ஆண்டு நடந்த நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. பிசியோதெரபி மருத்துவர் பாலாஜி முருகதாஸுடன் நான்கு பெண்கள் நெருங்கி பழகுகின்றனர். திடீரென்று பாலாஜி முருகதாஸ் காணாமல் போகிறார். அவரை போலீசார் தேடுகின்றனர். போலீசாரின் விசாரணையில் அவர் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வருகிறது. பின்னர் அவர் மாயமானதன் பின்னணி என்ன? நான்கு பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? என்பதே மீதி கதை. திகிலோடு தொடங்கி கடைசி வரை விறுவிறுப்பை படம் தக்க வைத்துள்ளது. பாலாஜி…

Read More

‘பிரேமம்’ படம் மூலமாக அறிமுகமான மடோனா செபாஸ்டியன் நடிக்கும் “ஹார்ட்டின்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. காதலும் கடந்து போகும், கவண், ப பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற பல தமிழ் படங்களில் மடோனா செபாஸ்டியன் நடித்திருக்கிறார். லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தார். சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை திரைப்படம் ‘ஹார்ட்டின்’. அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார். பிரபல நடிகர்கள் இதர முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘ஹார்ட்டின்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஹார்ட்டின் திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், நகைச்சுவை கலந்த காதல் கதை இது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கி வருகிறோம். சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. 2025 கோடை விடுமுறைக்கு ‘ஹார்ட்டின்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார். இதனையடுத்து, ‘ஹார்ட்டின்’ படத்தின் பர்ஸ்ட்…

Read More

கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெய்வமாக வணங்கும் ‘பஞ்சுருளி’ என்ற காவல் தெய்வத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருந்தது. இதில் ரிஷப் ஷெட்டி ஏற்று நடித்த பஞ்சுருளி தெய்வ கதாபாத்திரம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ‘காந்தாரா சாப்டர் 1’ என்று பெயரிட்டு உள்ளதுடன், அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது. “காந்தாரா” படத்தின் மூலமாக கர்நாடகா மற்றும் கேரளா மாநில எல்லைப்பகுதியில் உள்ள பஞ்சுருளி வனத்தெய்வம் குறித்து பெரும்பாலானோருக்கு தெரிய வந்தது இந்தநிலையில், மங்களூரில் உள்ள ஜரந்தய தெய்வா பஞ்சுருளி கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Read More

2ஆவது முறையாக அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்புவது, இறக்குமதி பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிப்பது போன்ற நடவடிக்கைகள் சர்வதேச நாடுகளை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறிப்பாக டிரம்பின் உத்தரவின்பேரில் கைகளில் விலங்குடன் 104 பேரை நாடு கடத்திய சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு எலான் மஸ்க், அமெரிக்க புலனாய்வுப்பிரிவு தலைவர் துளசி கப்பாட் ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பையும் வெள்ளை மாளிகையில் மோடி சந்தித்தார். வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்டவை தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்தனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி,…

Read More

உலகம் முழுவதும் பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், இந்த தினத்தை வர்த்தகர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ள காதலர் தினத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காதலர் தினத்தன்று இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுதல், சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துதல், மோசடிகளில் ஈடுபடுதல், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும் என்றும், காதலர் தினத்தன்று இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களிலிருந்து இளைஞர், யுவதிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர். அத்துடன், இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு…

Read More

இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. பதும் நிஷாங்க 4 ரன்னிலும், அவிஷ்க பெர்னாண்டோ 1 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 19 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 55 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய நிலையில், 5ஆவது வீரராக களம் இறங்கிய கேப்டன் சரித் அசலங்கா அதிரடி காட்டினார். ஜனித் லியனாகே (11), துனித் வெலாலாகே (30) ஆகியோருடன் இணைந்து அசலங்கா 71 பந்தில் அரைசதம் கடந்தார். அதிரடியாக விளையாடிய நிலையில் 126 பந்தில் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் ஸ்கோர் 214 ரன்னாக இருந்த நிலையில், கடைசி விக்கெட்டும் அதே ரன்னில் இழக்க இலங்கை 46 ஓவரில் 214 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 215 ரன்கள்…

Read More

ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு அவரை பாராட்டும்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொண்டதுடன், யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஐஸ்வர்யாவுக்கு இயக்குநராகும் ஆசை இருப்பதை தெரிந்துகொண்ட தனுஷ் 3 படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. அடுத்ததாக அவர் இயக்கிய வை ராஜா வை படமும் சுமாரான வரவேற்பையே பெற்றது. திடீரென இருவரும் பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தனர். தனுஷை பிரிந்த பிறகு சில மாதங்களுக்கு முன்பு அவரது இயக்கத்தில் லால் சலாம் படம் தியேட்டரில் வெளியானது. ரஜினிகாந்த் கெஸ்ட் ரோல் செய்த படம் படுதோல்வியை சந்தித்தது. இன்றுவரை லால் சலாம் ஓடிடியிலும் ரிலீஸாகவில்லை. தனுஷும், ஐஸ்வர்யாவும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார்கள். அவர்களுக்கு நீதிமன்றம் கடந்த வருடம் விவாகரத்தை கொடுத்துவிட்டது. எனவே தனுஷும், ஐஸ்வர்யாவும்…

Read More

அஜித்தின் அடுத்த படமான ஏகே 64 படத்தில் அஜித்தை இயக்க போவது யார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்த விடாமுயற்சி படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இயக்கி வரும் குட் பேட் அக்லி படம் இந்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், குட் பேட் அக்லி படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் அஜித்தின் அடுத்த படமான ஏகே 64 படத்தை இயக்க போகும் இயக்குநர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏகே 64 படத்திற்காக இரண்டு இயக்குநர்கள் அதிகம் பரிந்துரைக்கப்பட்டு வருவதாகவும், கார்த்திக் சுப்புராஜ், ஏகே 64 படத்தை இயக்குவதற்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.…

Read More

மலையாள நடிகையான கனி குஸ்ருதி மற்றும் திவ்ய பிரபா ஆகியோர் நடித்த ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ படம் கான்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் ஃப்ரி விருதை வென்றது. அத்துடன், கோல்டன் குளோப் விருதுக்கும் நாமினேட் ஆனது. இந்த நிலையில், கனி குஸ்ருதி மற்றும் திவ்ய பிரபா இருவரும் இங்கிலாந்தின் பிரபல மேகஸினுக்காக கட்டிப்பிடித்தபடி நெருக்கமாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மலையாள நடிகையான கனி குஸ்ருதி தமிழில் பிசாசு, பர்மா, சிவபுராணம், ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான All We Imagine As Light திரைப்படம் உலகளவில் கொண்டாடப்பட்டது. நடிகை திவ்ய பிரபா மற்றும் கனி குஸ்ருதி இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மலையாள நடிகையான திவ்ய பிரபாவும் கனி குஸ்ருதியும் கவர்ச்சியாக உடையணிந்து கொடுத்துள்ள போஸ் இணைத்தில் வைரலாகி வருகின்றது. பிரபல புகைப்படக்கலைஞர் இந்திரா…

Read More