Close Menu
  • முகப்பு
  • உலகம்
  • கிரிக்கெட்
  • சினிமா
  • புகைப்படங்கள்
  • விமர்சனம்
  • ஜோதிடம்
Facebook X (Twitter) Instagram
  • News
  • Radio
  • AhaFm
  • News21
  • Cinema
  • Seithi
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
Colombo Tamil
Subscribe
Thursday, November 5
  • முகப்பு
  • உலகம்
    • கனடா
    • அமெரிக்கா
    • லண்டன்
    • பிரான்ஸ்
    • சுவிட்சர்லாந்து
    • இந்தியா
  • கிரிக்கெட்
    • உலக கிரிக்கெட்
    • இந்திய கிரிக்கெட்
    • இலங்கை கிரிக்கெட்
    • ஐ.பி.எல்
    • இந்திய பெண்கள் அணி
    • இலங்கை பெண்கள் அணி
  • உறவுகள்
  • சினிமா
  • விமர்சனம்
  • படங்கள்
  • ஜோதிடம்
Colombo Tamil
Home » பிக்பாஸ் பாலாஜி நடித்த ‘பயர்’ விமர்சனம் – படம் எப்படி இருக்கிறது?

பிக்பாஸ் பாலாஜி நடித்த ‘பயர்’ விமர்சனம் – படம் எப்படி இருக்கிறது?

இணையதளச் செய்திப் பிரிவுBy இணையதளச் செய்திப் பிரிவுFebruary 15, 2025 சினிமா
Share Facebook Twitter WhatsApp Copy Link Pinterest LinkedIn Email Telegram Threads
fire tamil movie review

‘பயர்’ விமர்சனம்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் பாலாஜி, அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கத்தில் ‘பயர்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டிகே இசையமைத்துள்ளார். 2020-ம் ஆண்டு நடந்த நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிசியோதெரபி மருத்துவர் பாலாஜி முருகதாஸுடன் நான்கு பெண்கள் நெருங்கி பழகுகின்றனர். திடீரென்று பாலாஜி முருகதாஸ் காணாமல் போகிறார். அவரை போலீசார் தேடுகின்றனர்.

போலீசாரின் விசாரணையில் அவர் இளம் பெண்களுடன் உல்லாசமாக இருந்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரிய வருகிறது. பின்னர் அவர் மாயமானதன் பின்னணி என்ன? நான்கு பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? என்பதே மீதி கதை.

திகிலோடு தொடங்கி கடைசி வரை விறுவிறுப்பை படம் தக்க வைத்துள்ளது. பாலாஜி முருகதாஸ் முதல் பாதியில் சாந்தமாகவும் பிற்பகுதியில் குரூர முகம் காட்டியும் அதிர வைக்கிறார். பிசியோதெரபி சிகிச்சை மூலம் பெண்களை வசப்படுத்தும் காட்சிகள் அதிர வைக்கிறது.

ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அமைதியாக வந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மிகையான ஆபாசம் பலவீனமாக இருந்தாலும் சொல்ல வந்த கதைக்கு அழுத்தம் கொடுக்க அவை பயன்பட்டு இருப்பது சிறப்பு.

சாக்ஷி அகர்வால் அழகும் கவர்ச்சியுமாய் கதாபாத்திரத்துக்கு வலுசேர்த்துள்ளார். ரச்சிதா மகாலட்சுமி கடன் கொடுத்தவனிடம் சிக்கி படும் அவஸ்தையை நேர்த்தியாக முகத்தில் கடத்தி உள்ளார். அரைகுறை உடையில் படுக்கை அறையில் அத்துமீறும் காட்சி உச்சம்.

நல்லவர் போல் பழகும் காமுகர்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சமூக பொறுப்போடு விழிப்புணர்வுவை படம் தருகின்றது.

Follow on WhatsApp Add as Preferred on Google
Share. Facebook Twitter WhatsApp Pinterest Telegram
இணையதளச் செய்திப் பிரிவு
இணையதளச் செய்திப் பிரிவு
  • Website

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.

Related Posts

சினிமா

மீண்டும் கலாய்க்க வருகிறார் மிர்ச்சி சிவா! ‘தமிழ்ப்படம் 3’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 5, 2026
சினிமா

சூர்யாவின் ‘Scene’ படத்தில் டிஎஸ்பி இன்பராஜ் அறிமுகம்: கொரோனா காலக் கொலை விசாரணை காட்சிகள் வெளியீடு

October 27, 2026
சினிமா

ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

October 16, 2026
சினிமா

உருவ விமர்சனங்கள் குறித்து கத்ரீனா கைப் மனம் திறந்த பதில்

October 13, 2026
சினிமா

‘டாக்ஸிக்’ திரைப்படம்: ஹை பட்ஜெட் பிட்டு படமா? – இயக்குனரின் பழைய பேட்டி வைரலாகும் நிலையில் ரசிகர்கள் கடும் விமர்சனம்!

August 27, 2026
சினிமா

தென்னிந்திய மொழிகளில் கலக்க ஆசை; கைரா வாசுதேவன் வெளிப்படை

August 25, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • About Us
  • Privacy Policy
  • Ownership & Funding Information
  • Contact Us
  • Contact Us
  • Corrections policy
  • Ethics Policy
  • Terms and Condition
© 2026 COLOMBOTAMIL.COM. Designed by InfoXdigital.

Type above and press Enter to search. Press Esc to cancel.