தென்னிந்திய மொழிகளில் கலக்க ஆசை; கைரா வாசுதேவன் வெளிப்படை

கைரா வாசுதேவன்
Advertisement

வைசாக் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவான சமீபத்திய மலையாளத் திரைப்படமான ‘கலீபா’ மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் கைரா வாசுதேவன்.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவருக்குப் புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்களும் கிடைத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கு மத்தியில், கைரா வாசுதேவன் தனது முதல் பட அனுபவம் குறித்தும், சினிமா உலகில் தனது எதிர்கால லட்சியங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: “‘கலீபா’ படத்தின் வெற்றி எனக்கும் பெரும் பிரபலத்தையும் அங்கீகாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகவும் பெருமையான ஒன்று. ஆரம்பத்தில், இவ்வளவு பெரிய நடிகர்களுடன் எப்படி நடிக்கப்போகிறோம் என்ற பயமும், மன அழுத்தமும் எனக்குள் இருந்தது. ஆனால் பிருத்விராஜ் மற்றும் இயக்குநர் வைசாக் உள்ளிட்டோர் எனது அந்த அழுத்தத்தை முழுமையாகப் போக்கி, மிகவும் அன்பாகவும் கனிவாகவும் பழகினார்கள்.

அவர்கள் எனக்கு மிகுந்த நம்பிக்கையும் அளித்தனர், இதற்காக நான் அவர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்று தெரிவித்தார். மேலும் அவர் தொடர்ந்து கூறியதாவது: “நான் எத்தனை மொழிகளில் பணியாற்றினாலும், மலையாள சினிமாவை ஒருபோதும் கைவிட மாட்டேன். ஏனெனில் எனக்கு மலையாள சினிமாதான் வீடு.

‘கலீபா’ படக்குழுவினர் எனக்கு அந்த இதமான வீட்டுணர்வை முழுமையாகத் தந்துள்ளனர், அதனால் நான் இப்போது வேறொரு மாநிலத்தில் இருப்பதாகவே உணரவில்லை. அதே நேரத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் கலக்க வேண்டும் என்பது எனது ஆசை” என்று தனது எதிர்காலத் திட்டங்களையும் பகிர்ந்துகொண்டார்.

Advertisement
Written by

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.