கிளாமர் குயின் சன்னி லியோன் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சன்னி லியோன்

பாலிவுட்டின் கிளாமர் குயினாக ரசிகர்களிடையே பிரபலமான நடிகை Sunny Leone தற்போது 45 வயதை எட்டியுள்ளார். கனடாவின் சர்னியாவில் 1981 மே 13-ஆம் தேதி பிறந்த இவர், பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தமிழ் ரசிகர்களிடமும் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் இடம்பெற்ற பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார்.

திரைப்படங்களில் பெரும்பாலும் கவர்ச்சி கதாபாத்திரங்கள் மற்றும் சிறப்பு தோற்றங்களில் நடித்திருந்தாலும், சன்னி லியோன் தற்போது கோடிக்கணக்கான சொத்துகளை சேர்த்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தகவல்களின் படி, இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 100 முதல் 115 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

ஒரு திரைப்படத்தில் நடிக்க சன்னி லியோன் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. சினிமாவைத் தவிர ரியாலிட்டி ஷோக்கள், சமூக வலைதள விளம்பரங்கள் மற்றும் பிராண்ட் ஒப்பந்தங்கள் மூலமும் கணிசமான வருமானம் பெறுகிறார். மேலும், ‘StarStruck’ என்ற பெயரில் தனியாக அழகுசாதனப் பொருட்கள் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

மும்பையின் அந்தேரி பகுதியில் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரம்மாண்ட பென்ட்ஹவுஸில் சன்னி லியோன் வசித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டு மும்பை ஓஷிவாராவில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான அலுவலக இடத்தையும் வாங்கியுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் சைன் அருகிலும் இவருக்கு ஒரு சொகுசு பங்களா இருப்பதாக கூறப்படுகிறது.

கார் கலெக்ஷனிலும் சன்னி லியோன் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மஸராட்டி, பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி உள்ளிட்ட பல உயர்தர சொகுசு கார்கள் இவரிடம் உள்ளன. குறிப்பாக Maserati Ghibli Nerissimo, Maserati Quattroporte, BMW 7 Series மற்றும் Audi A5 போன்ற கார்களை பயன்படுத்தி வருகிறார்.

சன்னி லியோனின் இயற்பெயர் கரஞ்சித் கவுர். சினிமா உலகில் அறிமுகமான பிறகு தனது பெயரை மாற்றிக் கொண்டார். 2012-ஆம் ஆண்டு வெளியான ‘Jism 2’ திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின்னர் ‘Ragini MMS 2’ திரைப்படம் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

இதுவரை Hate Story 2, Singh Is Bliing, Mastizaade, Raees, Noor, Baadshaho உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சன்னி லியோன், தற்போது Rangila, Shero, Helen மற்றும் The Battle of Bhima Koregaon போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net