‘டாக்ஸிக்’ திரைப்படம்: ஹை பட்ஜெட் பிட்டு படமா? – இயக்குனரின் பழைய பேட்டி வைரலாகும் நிலையில் ரசிகர்கள் கடும் விமர்சனம்!

டாக்ஸிக்
Advertisement

யாஷ் நடிப்பில் உருவான பிரமாண்டப் படம் ‘டாக்ஸிக்’ திரையரங்குகளில் வெளியாகி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தற்போது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கும், வசூல் சாதனைகளுக்கும் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக படத்தின் திரைக்கதை, நீண்ட இயங்கு நேரம், அதிகப்படியான வன்முறை, மது மற்றும் புகை காட்சிகள், கிளாமரான காட்சிகள் என பல்வேறு அம்சங்களுக்காக படம் ரசிகர்களால் கேள்விக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் கீது மோகன் தாஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. அந்த பேட்டியில் அவர், “நான் ஒரு கதையை எழுதும் போது வேறு ஒன்றை எழுதுவேன், ஆனால் திரையில் வேறு ஒன்றைக் காண்பிப்பேன். படப்பிடிப்பில் பல மாற்றங்கள் நடக்கும். எடிட்டிங் முடிந்த பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றம் ஏற்படும். இறுதியில் படம் வந்து சேரும் போது நான் மகிழ்ச்சியாக இருப்பேன்” என்று கூறியிருந்தார்.

இந்த பழைய கருத்து தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “ஸ்கிரிப்ட்டை நானே பார்க்க மாட்டேன் என்று இயக்குனரே சொல்லிவிட்டார். இப்போது புரிகிறது, யாஷிடம் ஒரு கதையைச் சொல்லி, பின்னர் முற்றிலும் வேறு ஒரு படமாக எப்படி உருவாக்கினார்கள் என்று” என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். “எழுதியது வேறு, படப்பிடிப்பு வேறு, எடிட்டிங் வேறு, இறுதியில் நமக்குக் கிடைத்தது ‘டாக்ஸிக்'” என்று மற்றொரு தரப்பினர் விமர்சிக்கின்றனர்.

முன்னதாக, பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டமாறன் இப்படத்தைப் பார்த்து, “இது ஹை பட்ஜெட் பிட்டு படம் மாதிரி இருக்கு” என்று கலாய்த்திருந்தார். இந்த கருத்தை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டு, சமூக வலைதளங்களில் பல மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல்களை பகிர்ந்து வருகின்றனர்.

ரசிகர்களின் கூற்றுப்படி, யாஷின் முந்தைய படங்களில் அவரது நடிப்பு, ஸ்டைல், ஆக்ஷன் காட்சிகள் போற்றப்பட்ட நிலையில், ‘டாக்ஸிக்’ படத்தில் அதிகப்படியான புகைப்பிடித்தல், மது அருந்துதல், துப்பாக்கிச் சூடு, கொலை மற்றும் வெட்டு காட்சிகள் மட்டுமே நிறைந்துள்ளதாகவும், கடைசி வரை படத்தின் மையக் கதை என்னவென்றே புரியவில்லை என்றும் பலர் குற்றம்சாட்டுகின்றனர்.

3 மணி நேரத்திற்கு மேல் இயங்கும் இந்த படத்தில், அடிக்கடி திரும்பத் திரும்ப வரும் காட்சிகள் ரசிகர்களை சலிப்படையச் செய்துள்ளன. படத்தின் கதை இவ்வாறு சொல்லப்படுகிறது: ஒரு ஹீரோயின் வருகிறார், அவருடன் உடலுறவு, பிறகு ஒரு குழந்தை பிறக்கிறது, அந்த குழந்தையே வில்லனாக மாறி, ஹீரோ லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்கிறார். இந்த அளவுக்கு துப்பாக்கிகள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், “இந்த துப்பாக்கிகளை எல்லாம் சேர்த்து வைத்தால் இந்தியாவிற்கே துப்பாக்கி தட்டுப்பாடு இருக்காது” போன்ற மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றன.

மேலும், “ஒரு பெண் இயக்குனர் இயக்கும்போது குறைந்த பட்ச கண்ணியம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பிரம்மாண்ட படங்களில் பெயரெடுத்த யாஷை இப்படி ஒரு பிட்டு படத்தில் நடிக்க வைத்துவிட்டாரே” என சில ரசிகர்கள் கடுமையான அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

எனினும், விமர்சனங்களுக்கு மத்தியிலும் ‘டாக்ஸிக்’ வசூலில் சில சாதனைகளைப் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Written by

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.