Author: இணையதளச் செய்திப் பிரிவு

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.

நடிகர் நாக சைதன்யா முதல் மனைவியான நடிகை சமந்தாவை விவாகரத்து செய்ததால் குற்றவாளியைப் போல் நடத்தப்படுவதாக கூறி வேதனை வெளியிட்டுள்ளார். நாக சைதன்யா கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்த நிலையில், 4 ஆண்டுகளில் விவாகரத்து பெற்று பிரிந்ததுடன், அதன் பின்னர் நடிகை சோபிதாவை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இதனையடுத்து, சமூக ஊடகங்களில் சோபிதா, நாக சைதன்யாவை சமந்தாவின் ரசிகர்கள் சாடி வருகின்றனர். இதுகுறித்து நாக சைதன்யா தெரிவிக்கையில், சமந்தாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவை நூறும் முறை யோசித்துதான் எடுத்தேன். அது நடந்து தற்போது பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனதல், நான் இன்னும் குற்றவாளியைப் போல் நடத்தப்படுகிறேன். இது என்னை மிகவும் புண்படுத்துகிறது” என வேதனை தெரிவித்துள்ளார்.

Read More

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மீட்பு வீரர்கள் அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மண்ணுக்குள் புதைந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமாகியுள்ள 30க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடனடியாக மாயமானவர்கள் தேடி மீட்குமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன், அப்பகுதியை சுற்றியுள்ள இடங்களின் புவியியல் குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ளுமாறு அந்நாட்டு பிரதமர் லி கியாங் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களாக மலையிலிருந்து பெரிய பாறைகள் அடிக்கடி உருண்டு வந்ததாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

நடிகர் அஜித் குமார் டுபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்றார். இந்த தொடரில் போர்ஸ்சே 992 பிரிவில் 3வது இடத்தை அஜித்தின் அணி பிடித்தது. இதன்பின்னர், போர்ச்சுகலில் நடைபெறும் கார் ரேஸில் அஜித் கலந்துகொள்ள உள்ளதுடன், இதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவரது கார் விபத்தில் சிக்கி உள்ளது. இது தொடர்பாக தெரிவித்துள்ளது அஜித், “இன்றைய பயிற்சியின்போது எனது கார் விபத்திற்குள்ளானது. விபத்திற்குள்ளான காரை குழுவினர் சரி செய்து விட்டனர்” என்று கூறியுள்ளார்.

Read More

‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்திலும் நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்தில் கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

Read More

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் முதல் நாளில் உலகம் முழுக்க சுமார் 55 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியானது. இந்தநிலையில் தற்போது சென்னையில் இரண்டு நாட்களில் 3.2 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறதாம். அத்துடன், வார இறுதி விடுமுறை நாட்களில் வசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விடாமுயற்சி பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 1: தமிழ்நாடு: 26.15 கோடி ரூபாய் பான் இந்தியா: 33 கோடி ரூபாய் உலகம் முழுவதும்: 48.45 கோடி விடாமுயற்சி நிறுவனம் இந்திய அளவில் 20 கோடியும், தமிழ்நாட்டில் 16.5 கோடியும், உலகம் முழுவதும் 28.75 கோடியும் முன்பதிவு செய்துள்ளது.

Read More

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள விடாமுயற்சி திரைப்படம் வெளிநாடுகளிலும், மற்ற சில நகரங்களிலும் இன்று அதிகாலை 4 மணி மற்றும் 5 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் இந்த படம் பற்றி தங்களின் கருத்துக்களை எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள். தமிழ் திரையுலகின் வசூல் மன்னன் அஜித் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் இன்று ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று காலை ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழகத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்தாலும், 9 மணிக்கு தான் படம் திரையரங்குகளில் வெளியாகியது. ஆனால் வெளிநாடுகள் மற்றும் பிற மாவட்டங்களில் இன்று காலை 4 மற்றும் 5 மணிக்கே ரசிகர்களின் சிறப்பு காட்சிகள் திரையிட பட்டன. அஜித் நடித்த விடாமுயற்சி படத்தின் விமர்சனம் விரைவில்..

Read More

நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படம் இன்று வெளியாகும் நிலையில் திரையரங்குகளில் ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க உற்சாகத்துடன் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டனர். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தில், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தேதி மாற்றப்பட்ட நிலையில் இன்று ‘விடாமுயற்சி’ திரையரங்குகளில் வெளியாகின்றது. இந்த நிலையில், அதிகாலை முதலே திரையரங்குக்கு வந்த ரசிகர்கள் ஆடி, பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 2023-ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் ‘துணிவு’ வெளியானதுடன், 2 ஆண்டுகளாக அஜித் படம் வெளியாகாவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் இரவு 2 மணிக்குள் 5 காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

Read More

2003ஆம் ஆண்டு ஷாம் நடிப்பில் வெளியான ‘இயற்கை’ படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் குட்டி ராதிகா. 9-வது படித்துக்கொண்டிருந்த போதே ‘நீல மேக சியாமளா’ என்ற படத்தில்அறிமுகமானதுடன், தொடர்ந்து கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்து தமிழில் ‘வர்ணஜாலம்’, ‘மீசை மாதவன்’, ‘உள்ளக்காதல்’ ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரான குமாரசாமியை திருமணம் செய்துகொண்ட குட்டி ராதிகாவின் திருமணம் குறித்து திரையுலகம் முதல் அரசியல் வட்டாரம் வரை பல்வேறு விவாதங்கள் நடந்தது. திருமணத்துக்குப் பின் ராதிகாவின் நடிப்பு முடிவுக்கு வந்தது. ஆனால், குமாரசாமியின் அரசியலை விட அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மக்கள் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினர். திருமணத்தின் போது குமாரசாமியை விட ராதிகா சுமார் 27 வயது இளையவர் என்பதுடன், இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். 1986-இல் அனிதா என்பவருடன் குமாரசாமியின் முதல் திருமணம் நடந்தது. ராதிகாவின் முதல் திருமணம் 2000-ஆம் ஆண்டு நடந்ததுடன், தொழிலதிபரான அவரது…

Read More

நடிகர் விஷாலுக்கு மார்க் ஆண்டனி படம் திருப்பு முனையை ஏற்படுத்தியதுடன், 12 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வந்த சுந்தர் சியின் மத கஜ ராஜா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் தற்போது 47 வயதாகும் விஷால், கடந்த 2019 ஆம் ஆண்டு அனிஷா ரெட்டியுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்தார். எனினும், 6 மாதங்கள் கழித்து அவர்களது திருமணம் ரத்தானதுடன், விஷால் பல நடிகைகளுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார். இந்த நிலையில், விஷாலும் நடிகை அபிநயாவும் காதலிப்பதாக தகவல் வெளியானது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டதுடன், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு மனைவியாக அபிநயா நடித்திருந்தார். இதன் காரணமாக இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இருவரும் காதலிப்பதால் தான் மார்க் ஆண்டனி படத்தில் அபிநயாவிற்கு வாய்ப்பும் கிடைத்ததாக…

Read More

ஜீ தமிழில் சத்யா என்ற தொடரில் நடித்த ஆயிஷா, பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்டார். பின்னர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான உப்பு புளி காரம் வெப் தொடரில் நடித்தார். இந்த நிலையில், புதிய படம் ஒன்றில் ஆயிஷா நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். அறிமுக இயக்குநர் ஜாபர் இந்த படத்தை இயக்க மறைந்த நடிகர் ரகுவரன் சகோதரர் ரமேஷ், புகழ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அஜித்தின் விடாமுயற்சி, இரும்புத்திரை, ராவண கோட்டம் போன்ற படங்களில் நடித்த கணேஷ் சரவணன் ஆயிஷாவிற்கு ஜோடியாக நாயகனாக நடிக்கிறாராம்.

Read More

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நீ நான் காதல்”தொடர் கடந்த நவம்பர் தொடங்கப்பட்டதுடன், 200 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. ஹிந்தி தொடரின் ரீமேக்காக இந்த தொடரில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களுமே முக்கிய பாத்திரமாக உள்ளது. இதில் ஒரு கதாபாத்திரம் இல்லை என்றாலும் தொடரில் சொதப்பலாகிவிடும். தற்போது இந்த தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விலகிய நிலையில், புதிய அஞ்சலியாக இனி ஸ்வேதா என்ற நடிகை நடிக்க உள்ளாராம்.

Read More

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக்கட்சியின் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து, அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்க உள்ளதுடன், பதவியேற்பு விழாவுக்கான கொண்டாட்டங்கள் நேற்று முன்தினம் மாலை வாணவேடிக்கைகளுடன் தொடங்கின. அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா அந்த நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கிறது. அமெரிக்க நேரப்படி நண்பகல் 12 மணிக்கு (இலங்கை நேரப்படி இரவு 10.30 மணி) பதவியேற்பு விழா நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்ற பின்னர் அடுத்த 4 ஆண்டுகளுக்கான தனது திட்டங்கள் குறித்து டிரம்ப் தனது முதல் உரை ஆற்றுவார்.

Read More