கர்நாடக மாநிலத்தில் மனுகுமார் (வயது 25) என்ற வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த பவானி (வயது 25) என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். உணவகம் ஒன்று வைத்து நடத்தி வரும் மனுகுமாரும் அந்த பெண்ணும் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மனுகுமார் தனது காதலியை தவிர்த்து வந்துள்ளதுடன்,திருமணக் குறித்துப் பேசினாலே தட்டிக் கழித்து வந்துள்ளார். இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் இருவரும் ஒரு தனி அறையில் அமர்ந்து திருமணம் குறித்து பேசியுள்ளனர். ஆனால், அப்போதும் அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பவானி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது காதலனை சரமாரியாக குத்தியுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த மனுகுமாரின் நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…
Author: இணையதளச் செய்திப் பிரிவு
ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் (Ivory Coast) பல ஆண்டுகளாக நிலைகொண்டிருந்த பிரான்ஸ் ராணுவ வீரர்கள் விரைவில் வெளியேற்றப்பட உள்ளதாக ஐவரி கோஸ்ட் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக அங்கு முகாமிட்டிருந்த பிரான்ஸ் வீரர்கள் விரைவில் வெளியேற்றப்பட உள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலசானே ஔட்டாரா (Alassane Ouattara) வெள்ளிக்கிழமை அறிவித்தார். தங்கள் நாட்டு ராணுவம் தற்போது திறம்பட செயலாற்றும் நிலையில் உள்ளதால், பிரான்ஸ் வீரர்களை வெளியேற்ற ஐவரி கோஸ்ட் அரசு முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். ஐவரி கோஸ்டின் ஜனாதிபதி திடீரென இந்த முடிவை எடுத்துள்ளதுடன், வேறு எந்தக் காரணத்தையும் வெளியிடவில்லை.
புத்தாண்டு தினத்தன்று நியூ ஆர்லியன்ஸில் (New Orleans) மேற்கொள்ளப்பட்ட வாகனத் தாக்குதலில் கொல்லப்பட்ட 14 பேரில் ஒரு பிரிட்டிஷ் பிரஜை (British national) அடங்குவதாக வெளியுறவு அலுவலகம் (Foreign Office) உறுதிப்படுத்தியுள்ளது. அவர் லண்டனில் உள்ள செல்சியாவைச் சேர்ந்த (Edward Pettifer) எட்வர்ட் பெட்டிஃபர், 31, என பெருநகர காவல்துறை பெயரிட்டுள்ளது. வெளிநாட்டு பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆதரவளிப்பதாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. தாக்குதலின் போது, நகரின் போர்பன் தெருவில் பிக்-அப் டிரக்கில் இருந்த ஒருவர் பொலிஸாரால் கொல்லப்படுவதற்கு முன்பு கூட்டத்தினரை மோதி தள்ளினார். இது தொடர்பில் பெட்டிஃபரின் குடும்பம் கூறுகையில், “நியூ ஆர்லியன்ஸில் எட் இறந்த சோகச் செய்தியால் முழு குடும்பமும் பேரழிவிற்கு ஆளாகியுள்ளது. அவர் ஒரு அற்புதமான மகன், சகோதரர், பேரன், மருமகன் மற்றும் பலருக்கு நண்பராக இருந்தார். இந்த கொடூரமான தாக்குதலால் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்த மற்ற குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்கள்…
பிரான்ஸ் வடக்கு பகுதில் அமைந்துள்ள A16 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 61 வயதுடைய பெண் ஒருவர் வீதியின் எதிர் திசையில் காரில்நீண்ட தூரம் பயணித்த நிலையில், வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் குறித்த பெணும், எதிரில் பயணித்த காரில் வந்த 52 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 46 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரான்சின் லீனா மேம்பாலத்தின் கீழே உள்ள ஆற்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் ஜனவரி 2 ஆம் திகதி வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. சடலம் மிதப்பதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலத்தின் கீழே இருந்து சடலத்தை மீட்டனர். உயிரிழந்தவர் ஆஃகானிஸ்தானைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுவதுடன், பிரேத பரிசோதனைகளுப் பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும். சம்பவம் தொடர்பில் 7 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே பல்வேறு நாடுகள் தங்கள் புலம்பெயர்தல் சட்டங்களில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. அந்த வகையில், புலம்பெயர்தல் விதிகளில் கனடா அரசு மாற்றங்களை செய்யவுள்ளது. 2025ஆம் ஆண்டு முதல் நிரந்தர குடியிருப்பு அனுமதி இலக்குகளை குறைக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மொத்தம் 105,000 சேர்க்கைகள் குறைக்கப்படும் என கனடா அரசு தெரிவித்துள்ளதுடன், அதில் தற்காலிக குடியிருப்பு அனுமதியும் உள்ளடங்கும். அத்துடன், சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி அனுமதிகளும் 2025ஆம் ஆண்டில் 10 சதவீதம் குறைக்கப்பட உள்ளது. வீட்டு வசதியை மேம்படுத்துவதற்காகவும், வேலையின்மை விகிதத்தை குறைப்பதற்காகவும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவும் இந்த நடவடிக்கைகளை கனடா எடுத்துள்ளது.
2019ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் மொத்தமாக முடக்கியது. இந்த நிலையில், கொரோனாவை போல வேறு ஒரு வைரஸ் பாதிப்பும் கூட 2025ம் ஆண்டு பெருந்தொற்றாக உருவாக வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்குத் தயாராகும் வகையில் பிரிட்டன் ஏற்கனவே தடுப்பூசிகளையும் வாங்கி குவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதல்முதலில் கொரோனா வைரஸ் பரவியது. கொரோனா பரவ தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் அது ஏற்படுத்திய வடு அப்படியே இருக்கிறது. இதற்கிடையே எந்தவொரு வைரஸ் வேண்டுமானாலும் திடீரென பெருந்தொற்றாக மாறும் ஆபத்து இருந்தாலும், சில வகை வைரஸ்கள் மற்றவற்றைக் காட்டிலும் அதிக ஆபத்தானதாக இருக்கிறது. அதில் குறிப்பாக இன்ஃப்ளூயன்ஸா A துணை வகை H5N1 வகை ஆபத்தானதாக மாறலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். H5N1 வைரஸ், அதாவது பறவை காய்ச்சலில் ஒரு வகை. இப்போது காடுகளில் இருக்கும் பறவைகள் மற்றும் வளர்க்கப்படும்…
பிரிட்டன் தலைநகரான லண்டனில் இந்தியாவை சேர்ந்த உயர்ந்த சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள் வீடு வாங்கி முதலீடு செய்து வருகின்றனர். தொழிலதிபர்கள் தொடங்கி திரை பிரபலங்கள் வரை விருப்பமான தெரிவாக லண்டன் ரியல் எஸ்டேட் சந்தை மாறியுள்ளது. பெரும்பாலும் இவர்கள் தங்களது குழந்தைகள் மேற்படிப்புக்காக லண்டனை தேர்வு செய்து அங்குள்ள ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர். லண்டனில் ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டின் விலை 3.2 கோடி ரூபாயாக உள்ளதுடன், மூன்று படுக்கையறை கொண்ட வீடு 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்கப்படுகின்றது. பெரும்பாலான இந்தியர்கள் மேஃபேர், மேரிலபோன், ஆக்ஸ்போர்ட் சர்க்கஸ் ஆகிய இடங்களில் தான் ரியல் எஸ்டேட் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு தொழில் விரிவாக்க வாய்ப்புகளை லண்டன் வழங்குவதுடன், சொத்து மதிப்பு நிலையாக உயர்ந்து வருகிறது. மேலும் அங்குள்ள வரி விதிப்பு முறை, உயர்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவையால் பெரும்பாலான இந்தியர்கள் லண்டனை நோக்கி படையெடுகின்றனர்.…
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. மதுரையில் இருந்து சென்னைக்கு மகளிரணி செல்லவிருந்த இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்தநிலையில், மதுரையில் இருந்து பாஜக மகளிர் அணியினர், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு தலைமை இன்று சென்னைக்கு பேரணியாக புறப்பட்டனர். போலீசார் தடையை மீறி பேரணி தொடங்கியது. இதையடுத்து, குஷ்பு உள்பட பாஜக மகளிரணியினரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த கைது சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, பாஜக மகளிரணி சார்பாக நடைபெறும் நீதிப் பேரணியில் கலந்து கொண்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யாவுக்கு மறக்க முடியாத ஒரு வருடமாக அமைந்தது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த ஆண்டு அவரின் ஆற்றலாலும், சர்ச்சைகளாலும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவி சர்ச்சை 2024 ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான தோல்விகளை சந்தித்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் முடித்தது. இந்தத் தோல்விகள் ஹர்திக்கிற்கு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தின. 2024 டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் இந்த வருடத்தில் மிகப் பெரிய திருப்பமாக இருந்தது 2024 டி20 உலகக் கோப்பை. இந்த தொடரில் ஹர்திக் பாண்ட்யா தனது ஆல் ரவுண்டர் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தினார். 8 போட்டிகளில் அவர் 144 ரன்கள் எடுத்ததுடன், 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்த…
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 என ஆப்கானிஸ்தான் கைப்பற்றியதுடன், இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் 1-0 என ஆப்கானிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புலவாயோவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தான் அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், ஜிம்பாப்வே அணி 30.1 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சீன் வில்லியம்ஸ் 60 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் சார்பில் கசன்பர் 5 விக்கெட்டும், ரஷித் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர் . இதையடுத்து, 128 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 26.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து…
ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 895 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், சக வீரரான ஹாரி புரூக்கை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கின்றார். அத்துடன், 876 புள்ளிகளுடன் ஹாரி புரூக் 2வது இடத்தில் உள்ளதுடன், 867 புள்ளிகளுடன் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 3-வது இடத்தில் உள்ளார் . மேலும், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 5வது இடத்தில் உள்ளதுடன், இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 6ஆவது இடத்திலும் உள்ளார். இந்திய அணியின் வீரர்களான ஜெய்ஸ்வால் 4வது இடத்திலும் , ரிஷப் பண்ட் 9-வது இடத்திலும் , சுப்மன் கில் 16-வது இடத்திலும், விராட் கோலி 20வது இடத்திலும், ரோகித் சர்மா 30-வது வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.