ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் ஜோ ரூட்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை

ஐசிசி டெஸ்ட் தரவரிசை

ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 895 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், சக வீரரான ஹாரி புரூக்கை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கின்றார்.

அத்துடன், 876 புள்ளிகளுடன் ஹாரி புரூக் 2வது இடத்தில் உள்ளதுடன், 867 புள்ளிகளுடன் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 3-வது இடத்தில் உள்ளார் .

மேலும், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 5வது இடத்தில் உள்ளதுடன், இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 6ஆவது இடத்திலும் உள்ளார்.

இந்திய அணியின் வீரர்களான ஜெய்ஸ்வால் 4வது இடத்திலும் , ரிஷப் பண்ட் 9-வது இடத்திலும் , சுப்மன் கில் 16-வது இடத்திலும், விராட் கோலி 20வது இடத்திலும், ரோகித் சர்மா 30-வது வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement