கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ விரைவில் பதவி விலகுவார் என்றும் 8 ஜனவரி தேசிய மிதவாதக் கட்சி கூடுவதற்குள் அறிவிப்பு வந்துவிடலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கட்சிக்குப் புதிய தலைவர் கிடைக்கும் வரை ட்ரூடோ தற்காலிகமாகப் பதவியில் நீடிப்பாரா என்பது தெரியவில்லை.
2015இல் பதவிக்கு வந்த ட்ரூடோ விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் பணவீக்கம் முதலியவற்றால் அண்மைக் காலத்தில் மக்களின் ஆதரவை இழந்துள்ளார்.
இந்நிலையில் ட்ரூடோ பதவி விலக நெருக்குதல் கூடியுள்ளதுடன், கனடாவில் இவ்வாண்டு அக்டோபர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
ட்ரூடோ பதவி விலகினால் தேர்தல் விரைவாக நடத்தப்படும் சாத்தியம் அதிகம் உள்ளதுடன், அமெரிக்காவின் அடுத்த அதிபராகும் டிரம்ப்பின் நிர்வாகத்தைச் சமாளிக்கக் கனடா புதிய நிர்வாகத்தை அமைக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகள்
கனடாவில் 400 கிலோகிராம் தங்கம் கொள்ளை: வெளியான புதிய தகவல்!
67 பேரின் கனேடிய குடியுரிமை இடைநிறுத்தம்: காரணம் என்ன?
மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் முடக்கம்!
கனடாவின் புதிய சட்டம்: 3 மில்லியன் பேருக்கு கனடிய பாஸ்போர்ட் – இரட்டைக் குடியுரிமை வாய்ப்பு
கனடாவில் துப்பாக்கி மரணங்கள் அதிகரிப்பு – புதிய ஆய்வு எச்சரிக்கை
Powered By Infox Cloud⚡





