மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்கள் வெள்ளிக்கிழமை மாலை திடீர் தொழில்நுட்பக் கோளாறால் முடங்கின.
குறிப்பாக, இந்தத் தளங்களின் டெஸ்க்டாப் பதிப்புகள் (Desktop versions) இயங்கவில்லை என்று புகார்கள் எழுந்தன.
எனினும், சில பயனர்களுக்கு மொபைல் செயலிகள் தொடர்ந்து இயங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை மற்றும் சேவைகள் எப்போது முழுமையாகச் சீராகும் என்பது குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.
Facebook வேலை செய்யவில்லை என்று 62,000க்கும் அதிகமான புகார்கள் வந்தன. Instagram வேலை செய்யவில்லை என்று தவித்து 8,000க்கும் அதிகமான புகார்கள்.
சிங்கப்பூரில் Facebook இல்லை என்று Downdetector தளத்தில் பதிவு செய்யப்பட்டது. பிலிப்பீன்ஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் Meta நிறுவனத்தின் பல்வேறு செயலிகள் குறித்து சிக்கல் சொல்லப்பட்டது.
Metaவின் செயலிக் குடும்பத்தில் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்குமுன் மார்ச் மாதம் பல நாடுகளில் தடங்கல் ஏற்பட்டது.
ஏன் என்ற கேள்விக்கு Meta உடனடியாகப் பதில் சொல்லவில்லை என்று ராய்ட்டர்ஸ் (Reuters) ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
