மகளிர் ஐசிசி தரவரிசை: 2வது இடத்துக்கு முன்னேறிய மந்தனா

பகிர்
WhatsApp Google News Facebook Post Telegram

மகளிருக்கான டி20 மற்றும் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையை ஐசிசி இன்று (17) வெளியிட்டுள்ளது. அதன்படி துடுப்பாட்ட தரவரிசையில் இந்தியாவின் மந்தனா ஒருநாள் போட்டியில் 3 இடங்கள் முன்னேறி 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் மந்தனா 2ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், டி20-யில் 1 இடம் முன்னேறி 3ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

மகளிர் ஐசிசி தரவரிசை
படம்: மகளிர் ஐசிசி தரவரிசை: 2வது இடத்துக்கு முன்னேறிய மந்தனா

அத்துடன், கேப்டன் கவுர் 2 இடங்கள் பின் தங்கி 13ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன், டி20யில் 1 இடம் முன்னேறி 11ஆவது இடத்தில் உள்ளதுடன், மற்றொரு இந்திய வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் டி20யில் 6 இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இதேவேளை, பந்து வீச்சை பொறுத்த வரையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒருநாள் போட்டியில் 5ஆவது இடத்தையும் டி20 போட்டியில் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்