Author: இணையதளச் செய்திப் பிரிவு

இணையதளச் செய்திப் பிரிவு

சிறப்புச் செய்திகள் யாவும் இணையதள செய்திப் பிரிவு என்ற பெயரில் இணையதள ஆசிரிய குழுவினரால் பதிவேற்றப்படுகின்றன.

மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், காயமடைந்த கேப்டன் சுப்மன் கில்லின் பகுதிக்கு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை அவசரமாகச் சேர்க்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின்போது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கவில்லை. அவர் அணியுடன் கவுஹாத்தி பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டாலும், இரண்டாவது டெஸ்டில் விளையாடுவதற்கான வாய்ப்பு தெளிவில்லாத சூழல் நீடிக்கிறது. கில் விளையாடவில்லை என்றால், சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல் ஆகியோர் மாற்று வீரர்களாக கருதப்படலாம். ஆனால் இருவரும் இடது கை பேட்ஸ்மேன்கள் என்பதால் இந்திய அணியில் ஏற்கனவே உள்ள ஆறு இடது கை வீரர்களுடன் சேர்த்து ஏழு இடது கை வீரர்களாக வேண்டிய நிலை உருவாகும். இது பேட்டிங் வரிசையில் சமநிலையைக் குலைக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த…

Read More

நேப்பியர்: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் புதன்கிழமை (நவம்பர் 19) அன்று விளையாடிய அபார இன்னிங்ஸ், கிரிக்கெட் வரலாற்றில் அவர் பெயரை பொற்குறியில் பதித்துவிட்டது. மழையால் 34 ஓவர்களுக்கு குறைக்கப்பட்ட இந்த போட்டியில், 4-ம் இடத்தில் வந்த ஹோப் வெறும் 69 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். உலகில் யாரும் செய்யாத சாதனை – 11 முழுநேர ICC அணிகளுக்கு எதிராக சதம் இந்த சதத்துடன், சர்வதேச கிரிக்கெட்டின் 11 முழுநேர உறுப்பினர் நாடுகளுக்கு எதிராகவும் சதம் அடித்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஹோப் படைத்துள்ளார். அவர் சதம் விளாசிய அணிகள்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, வங்கதேசம், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான். பிரையன் லாராவின் கேப்டன் சாதனையும் முறியடித்தார் இதன்மூலம், வெஸ்ட்…

Read More

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் மற்றும் டி20 பேட்டிகளில ஓய்வு எடுத்துள்ள அவர், டெஸ்டில் 30 சதங்கள் மற்றும் 31 அரைசதங்கள், ஒருநாளில் 51 சதங்கள் மற்றும் 75 அரைசதங்கள், டி20-யில் ஒரு சதம் மற்றும் 38 அரைசதங்கள் என மொத்தம் 82 சர்வதேச சதங்கள் பெற்றுள்ளார். ஜாம்பவான் பேட்ஸ்மேனாக உயர்ந்து நிற்கும் கோலியை ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டியுள்ளார். “விராட் கோலி ஒரு அபாரமான வீரர். முக்கியமான தருணங்களில் ரன் சேஸ் செய்யும் அவரின் திறமை தனிச்சிறப்பு. அவர் சேர்த்திருக்கும் ரன்களின் எண்ணிக்கை நம்ப முடியாத அளவு பெரிதாக உள்ளது,” என்று கோலியைப் புகழ்ந்தார் ஸ்மித்.

Read More

பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 148 ரன்கள் இலக்காக வைத்து பாகிஸ்தான் அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. சாஹிப்சதா பர்ஹான் 16 ரன்களில் வெளியேறிய பிறகு களமிறங்கிய பாபர் அசாம், மூன்று பந்துகள் மட்டுமே விளாசி எவன்ஸ் பந்தில் டக் அவுட் ஆனார். இதுவே பாபர் அசாமின் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஒன்பதாவது டக் ஆகும். இந்த டக் மூலம், அதிக முறை டக் அடைந்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஷாகித் அப்ரிடியை மீறி பாபர் அசாம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Read More

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இலங்கை அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்து பாகிஸ்தான் வெற்றிகரமாக தொடரை கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளையும் வென்றிருந்த பாகிஸ்தான், ராவல்பிண்டியில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் 212 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. ஃபகார் சமான் மற்றும் முகமது ரிஸ்வான் தலா அரைசதங்களைப் பூர்த்தி செய்து அணியின் வெற்றியை எளிதாக்கினர். இந்த ஆட்டத்தில் வாசிம் ஜூனியர் ‘ஆட்ட நாயகன்’ விருதையும், தொடரின் சிறந்த வீரர் விருதை ஹரிஸ் ராஉப் பெற்றார்.

Read More

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்தியா – தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி ரன்கள் குறைந்த சுவாரஸ்யமான போட்டியாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 159 ரன்னில் மடங்கியபோதும், இந்தியா தனது முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆகியது. இரண்டாம் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 153 ரன்கள் எடுத்தது. எனினும் 124 ரன்கள் என்ற எளிய இலக்கை அடைய இந்திய அணி தவறி, ஆட்டத்தை இழந்தது. இவ்வெற்றியுடன் தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தனது கேப்டன்ஷிப் சாதனையை மேலும் உயர்த்திக் கொண்டார். பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணிக்கு இதுவரை எந்தத் தோல்வியும் இல்லை. அவர் வழிநடத்திய 11 டெஸ்ட் போட்டிகளில் 10 வெற்றிகளையும் ஒரு டிராவையும் அணி பெற்றுள்ளது. இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியின்றி அதிவேகமாக 10 வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற தனிச் சாதனையை பவுமா தனது பெயரில் பதிவு…

Read More

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 15 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் தென்ஆப்பிரிக்கா பெற்ற இந்த வெற்றி குறிப்பிடத்தகுந்ததாகும். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் மூன்று பந்துகள் மட்டுமே விளையாடிய இந்திய கேப்டன் சுப்மன் கில், கடுமையான கழுத்து வலி காரணமாக retired hurt ஆகி மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர், அவர் முதல் டெஸ்டில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு சுப்மன் கில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் வீட்டில் இருந்தாலும் மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வரும் 2வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது குறித்துக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Read More

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஷெஃபீல்ட் சீல்ட் தொடரில், நியூ சவுத் வேல்ஸ் (NSW) மற்றும் விக்டோரியா (VIC) அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கடந்த 10-ந் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த ஒரு அற்புதமான கேட்ச், களத்தில் இருந்த பேட்டரையே அதிர்ச்சியடைய வைத்ததால், அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டாஸ் வென்ற விக்டோரியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 382 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் அணி 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து, 2-வது இன்னிங்சை ஆடிய விக்டோரியா அணி 171 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதன் காரணமாக நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக 425 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் அணியின் 2-வது இன்னிங்சில், அவர்கள்…

Read More

கிரிக்கெட் செய்தி: பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் தங்களுக்குள் 2 முறை மோத உள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். இந்தத் தொடர் வருகிற 17-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரின் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்த முத்தரப்பு டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் ஆகா தலைமையில் ஆன இந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி, பகர் ஜமான் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணியின் விவரம் சல்மான் ஆகா (கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பகார் ஜமான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், முகமது சல்மான் மிர்சா, நசீம்…

Read More

கிரிக்கெட் செய்தி: இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியானது நாளை (11-ம் தேதி) ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷாகீன் அப்ரிடி தலைவராக (கேப்டன்) செயல்படுவார். அணியில், பாபர் அசாம், ரிஸ்வான், பகர் ஜமான், சைம் அயூப், அப்ரார் அகமது போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். பாகிஸ்தான் அணியின் விவரம் ஷாகீன் அப்ரிடி (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பைசல் அக்ரம், பகர் ஜமான், ஹரிஸ் ரவுப், ஹசீபுல்லா, ஹுசைன் தலாத், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் ஆகா.

Read More

கிரிக்கெட் செய்தி: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான இந்தத் தொடரின் முதல் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு (ICC World Test Championship) உட்பட்ட தொடராகக் கருதப்படுவதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனால் தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான பார்த்தீவ் படேல் தேர்வு செய்துள்ளார். பார்த்தீவ் படேல் தேர்வு செய்த அணியின் தலைவராக (கேப்டன்) சுப்மன் கில் இருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, இந்த அணியில் சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 2 தமிழக…

Read More

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் 2029-ம் ஆண்டு முதல் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது. தற்போது மகளிர் உலகக் கோப்பையில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வருகின்றன. இந்த எண்ணிக்கையை அதிகரித்து, ஆண்களுக்கான உலகக் கோப்பைக்கு நிகராக மகளிர் அணியையும் விரிவுபடுத்த ஐ.சி.சி. இந்த முடிவை எடுத்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Read More