இலங்கையை 3-0 என ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் vs இலங்கை

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இலங்கை அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்து பாகிஸ்தான் வெற்றிகரமாக தொடரை கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளையும் வென்றிருந்த பாகிஸ்தான், ராவல்பிண்டியில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

பின்னர் 212 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து சுலப வெற்றி பெற்றது. ஃபகார் சமான் மற்றும் முகமது ரிஸ்வான் தலா அரைசதங்களைப் பூர்த்தி செய்து அணியின் வெற்றியை எளிதாக்கினர்.

இந்த ஆட்டத்தில் வாசிம் ஜூனியர் ‘ஆட்ட நாயகன்’ விருதையும், தொடரின் சிறந்த வீரர் விருதை ஹரிஸ் ராஉப் பெற்றார்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net