கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 15 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் தென்ஆப்பிரிக்கா பெற்ற இந்த வெற்றி குறிப்பிடத்தகுந்ததாகும்.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் மூன்று பந்துகள் மட்டுமே விளையாடிய இந்திய கேப்டன் சுப்மன் கில், கடுமையான கழுத்து வலி காரணமாக retired hurt ஆகி மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர், அவர் முதல் டெஸ்டில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு சுப்மன் கில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் வீட்டில் இருந்தாலும் மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வரும் 2வது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது குறித்துக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்





