முத்தரப்பு டி20 தொடர்: சல்மான் ஆகா தலைமையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு

முத்தரப்பு டி20 தொடர்

கிரிக்கெட் செய்தி: பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன.

இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் தங்களுக்குள் 2 முறை மோத உள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.

இந்தத் தொடர் வருகிற 17-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரின் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், இந்த முத்தரப்பு டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் ஆகா தலைமையில் ஆன இந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி, பகர் ஜமான் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் விவரம்

சல்மான் ஆகா (கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பகார் ஜமான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், முகமது சல்மான் மிர்சா, நசீம் ஷா, சாஹிப்சாதா பர்ஹான், சைம் அயூப், ஷாகீன் அப்ரிடி, உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net