பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 148 ரன்கள் இலக்காக வைத்து பாகிஸ்தான் அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது.
சாஹிப்சதா பர்ஹான் 16 ரன்களில் வெளியேறிய பிறகு களமிறங்கிய பாபர் அசாம், மூன்று பந்துகள் மட்டுமே விளாசி எவன்ஸ் பந்தில் டக் அவுட் ஆனார். இதுவே பாபர் அசாமின் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஒன்பதாவது டக் ஆகும்.
இந்த டக் மூலம், அதிக முறை டக் அடைந்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஷாகித் அப்ரிடியை மீறி பாபர் அசாம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
