பார்த்தீவ் படேல் தேர்வு செய்த முதல் டெஸ்ட் பிளேயிங் லெவன்: 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு!

பார்த்தீவ் படேல்

கிரிக்கெட் செய்தி: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான இந்தத் தொடரின் முதல் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடர் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு (ICC World Test Championship) உட்பட்ட தொடராகக் கருதப்படுவதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனால் தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான பார்த்தீவ் படேல் தேர்வு செய்துள்ளார். பார்த்தீவ் படேல் தேர்வு செய்த அணியின் தலைவராக (கேப்டன்) சுப்மன் கில் இருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, இந்த அணியில் சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய 2 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பார்த்தீவ் படேல் தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன் (Playing XI)

• ஜெய்ஸ்வால்
• கே.எல்.ராகுல்
• சாய் சுதர்சன்
• சுப்மன் கில் (கேப்டன்)
• ரிஷப் பண்ட்
• நிதிஷ் ரெட்டி அல்லது துருவ் ஜூரெல்
• ஜடேஜா
• வாஷிங்டன் சுந்தர்
• குல்தீப் யாதவ்
• முகமது சிராஜ்
• ஜஸ்பிரித் பும்ரா

LATEST Post

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net