இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஷாகீன் அப்ரிடி தலைமையில் பாகிஸ்தான் அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்

கிரிக்கெட் செய்தி: இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியானது நாளை (11-ம் தேதி) ராவல்பிண்டியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷாகீன் அப்ரிடி தலைவராக (கேப்டன்) செயல்படுவார்.

அணியில், பாபர் அசாம், ரிஸ்வான், பகர் ஜமான், சைம் அயூப், அப்ரார் அகமது போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் விவரம்

ஷாகீன் அப்ரிடி (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அசாம், பஹீம் அஷ்ரப், பைசல் அக்ரம், பகர் ஜமான், ஹரிஸ் ரவுப், ஹசீபுல்லா, ஹுசைன் தலாத், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் ஆகா.

Advertisement