சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதன்படி, வரும் 2029-ம் ஆண்டு முதல் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
தற்போது மகளிர் உலகக் கோப்பையில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வருகின்றன. இந்த எண்ணிக்கையை அதிகரித்து, ஆண்களுக்கான உலகக் கோப்பைக்கு நிகராக மகளிர் அணியையும் விரிவுபடுத்த ஐ.சி.சி. இந்த முடிவை எடுத்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
