டெம்பா பவுமாவின் புதிய கேப்டன்ஷிப் சாதனை – தோல்வியின்றி அதிவேக 10 டெஸ்ட் வெற்றிகள்

டெம்பா பவுமாவின் புதிய கேப்டன்ஷிப் சாதனை

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற இந்தியா – தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி ரன்கள் குறைந்த சுவாரஸ்யமான போட்டியாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 159 ரன்னில் மடங்கியபோதும், இந்தியா தனது முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆகியது.

இரண்டாம் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 153 ரன்கள் எடுத்தது. எனினும் 124 ரன்கள் என்ற எளிய இலக்கை அடைய இந்திய அணி தவறி, ஆட்டத்தை இழந்தது.

இவ்வெற்றியுடன் தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தனது கேப்டன்ஷிப் சாதனையை மேலும் உயர்த்திக் கொண்டார். பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணிக்கு இதுவரை எந்தத் தோல்வியும் இல்லை. அவர் வழிநடத்திய 11 டெஸ்ட் போட்டிகளில் 10 வெற்றிகளையும் ஒரு டிராவையும் அணி பெற்றுள்ளது.

இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியின்றி அதிவேகமாக 10 வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற தனிச் சாதனையை பவுமா தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net