2026 முதல் ETA அனுமதி இல்லாமல் பிரித்தானியாவுக்கு நுழைய முடியாது: கனேடிய பயணிகளுக்கு புதிய அறிவிப்பு

பகிர்
WhatsApp Google News Facebook Post Telegram

பிரித்தானியாவுக்கு பயணம் செய்ய திட்டமிடும் கனேடியர்கள் இனிமேல் பயண அனுமதி இல்லாமல் நாட்டில் நுழைய முடியாது என்று பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.

2026 பிப்ரவரி 25ஆம் தேதி முதல், கனேடிய பிரஜைகள் முன்கூட்டியே Electronic Travel Authorization (ETA) எனப்படும் பயண அனுமதியை பெற்றிருக்க வேண்டும். இந்த அனுமதிக்கான கட்டணம் 30 கனேடிய டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ETA-வை U.K. eTA app மூலம் அல்லது இணைய வழியாக விண்ணப்பித்து பெற முடியும்.

2026 முதல் ETA அனுமதி இல்லாமல் பிரித்தானியாவுக்கு நுழைய முடியாது: கனேடிய பயணிகளுக்கு புதிய அறிவிப்பு
படம்: 2026 முதல் ETA அனுமதி இல்லாமல் பிரித்தானியாவுக்கு நுழைய முடியாது: கனேடிய பயணிகளுக்கு புதிய அறிவிப்பு

இதே சமயம், இந்த விதிமுறைகள் இரட்டைக் குடியுரிமை கொண்ட கனேடியர்களுக்கு பொருந்தாது. கனேடிய மற்றும் பிரித்தானிய இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் பிரித்தானியாவுக்கு நுழைய பிரித்தானிய பாஸ்போர்ட் அல்லது ‘certificate of entitlement’ ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்