இந்தியா–தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக சிரமத்தை எதிர்கொண்டுவருகிறது. முதல் டெஸ்டை இழந்த இந்தியா, தற்போது நடைபெறும் இரண்டாவது போட்டியிலும் மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில், பேட்டிங் வரிசை மாற்றம் குறித்து பேசப்படும் போது வாஷிங்டன் சுந்தர் கவனம் ஈர்த்துள்ளார்.
முதல் டெஸ்டில் யாரும் எதிர்பாராத வகையில் அவர் 3-வது இடத்தில் களமிறக்கப்பட்டார். ஆனால் இரண்டாவது டெஸ்டில் 8-வது இடத்தில் பேட்டிங் செய்த அவர், சிறப்பாக 48 ரன்கள் எடுத்த பின்னர் ஆட்டமிழந்தார்.
பேட்டிங் வரிசையில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களைப் பற்றி கேட்கப்பட்டபோது, சுந்தர் பதிலளித்தது பின்வருமாறு:
“அணி என்னை எந்த இடத்தில் பேட்டிங் செய்ய விரும்புகிறதோ, எந்த சூழ்நிலையில் விளையாடச் சொல்கிறதோ, அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். இது ஒரு அணிக் விளையாட்டு. அணிக்காக தேவையான வேலையைச் செய்ய எப்போதும் தயாராக இருப்பதே என் நோக்கம்.
உண்மையைச் சொன்னால், எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு ரோலும் ஒரு புதிய அனுபவம். பலருக்கு இது கிடைக்காது. அணி எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பேட்டிங் ஆனாலும் பந்துவீச்சானாலும், நான் தயாராக இருக்க வேண்டும். அதுவே எனக்கு உற்சாகமாக உள்ளது.”
இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்





