2026 ஆம் ஆண்டின் சனி ஜெயந்தி மே 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் சனி பகவானுக்குரிய சனிக்கிழமையிலேயே இந்த விழா வருவதுடன், பல அரிய யோகங்களும் ஒரே நாளில் உருவாகுகின்றன. அதில் முக்கியமாக, ரிஷப ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் ஜோதிட ரீதியாக மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. இந்த யோகம் அறிவு, தொழில் முன்னேற்றம், செல்வ வளர்ச்சி மற்றும் சமூக மரியாதையுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. மேலும், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கேதார யோகமும் உருவாகுவதால், சில ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் அதிர்ஷ்டமானதாக அமையும் என கூறப்படுகிறது. ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புதாதித்ய ராஜயோகம் முதல் வீட்டில் உருவாகுவதால் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கலாம். நிதி நிலைமை சீராகி சேமிப்பு அதிகரிக்கும்.…
Author: இணையதளச் செய்திப் பிரிவு
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் கிரக சேர்க்கைகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. குறிப்பாக சில அரிய கிரக அமைப்புகள் உருவாகும் போது, அவை பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அந்த வகையில், வைகாசி மாத தொடக்கத்தில் உருவாகும் மூன்று முக்கிய சுபயோகங்கள் தற்போது ஜோதிட ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மே 15ஆம் தேதி சூரியன் ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி பெறும் நிலையில், ஒரே நேரத்தில் ருச்ச யோகம், புதாதித்ய யோகம் மற்றும் பரிவர்த்தனை யோகம் ஆகிய மூன்று முக்கிய யோகங்கள் உருவாகின்றன. மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி நிலை பெறுவதால் ருச்ச யோகம் உருவாகிறது. அதேபோல் ரிஷப ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்வதால் புதாதித்ய யோகம் அமைகிறது. மேலும் ரிஷபத்தில் புதன் மற்றும் மிதுனத்தில் சுக்கிரன் இருப்பதால் பரிவர்த்தனை யோகம் உருவாகிறது. இந்த மூன்று யோகங்களும் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை வழங்கும்…
15 வயதிலேயே கிரிக்கெட் உலகை அதிரவைத்த இளம் வீரர் Vaibhav Suryavanshi மீண்டும் ஒரு உலக சாதனையை பதிவு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் இவர், தனது அதிரடி பேட்டிங்கால் முன்னணி பந்துவீச்சாளர்களையே கலங்கடித்து வருகிறார். சமீபத்தில் T20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை வைபவ் படைத்துள்ளார். 20 வயதுக்குட்பட்டோரில் இதுவரை யாரும் எட்டாத இந்த சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் Kieron Pollard வைத்திருந்த நீண்டகால சாதனையை வைபவ் முறியடித்துள்ளார். பொல்லார்ட் 843 பந்துகளில் 100 சிக்ஸர்கள் அடித்திருந்த நிலையில், வைபவ் வெறும் 514 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வைபவ் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். அந்த ஆட்டத்தில் வெறும் 16 பந்துகளில் 36 ரன்கள் குவித்த அவர்,…
பாலிவுட்டின் கிளாமர் குயினாக ரசிகர்களிடையே பிரபலமான நடிகை Sunny Leone தற்போது 45 வயதை எட்டியுள்ளார். கனடாவின் சர்னியாவில் 1981 மே 13-ஆம் தேதி பிறந்த இவர், பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தமிழ் ரசிகர்களிடமும் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் இடம்பெற்ற பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார். திரைப்படங்களில் பெரும்பாலும் கவர்ச்சி கதாபாத்திரங்கள் மற்றும் சிறப்பு தோற்றங்களில் நடித்திருந்தாலும், சன்னி லியோன் தற்போது கோடிக்கணக்கான சொத்துகளை சேர்த்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தகவல்களின் படி, இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 100 முதல் 115 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு திரைப்படத்தில் நடிக்க சன்னி லியோன் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. சினிமாவைத் தவிர ரியாலிட்டி ஷோக்கள், சமூக வலைதள விளம்பரங்கள் மற்றும் பிராண்ட் ஒப்பந்தங்கள்…
14.05.2026 வியாழக்கிழமைக்கான தினசரி ராசிபலன்கள் வெளியாகியுள்ளன. இன்று சில ராசிக்காரர்களுக்கு கடன் பிரச்சினைகள் குறையும் சூழல் உருவாகும் நிலையில், சிலருக்கு திடீர் பணவரவும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான வேலை, தொழில், நிதி, குடும்பம் மற்றும் ஆரோக்கிய பலன்களை இங்கே பார்க்கலாம். மேஷ ராசிக்காரர்கள் இன்று எடுத்த முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனைகள் நடைபெறும். தொழில் வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடி வருபவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ரிஷப ராசிக்காரர்களுக்கு பணிகளில் தாமதம் மற்றும் தடைகள் ஏற்படலாம். வேலை மற்றும் வியாபாரத்தில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். குழந்தைகளின் உடல்நலத்தில் அக்கறை தேவை. இருப்பினும் பணவரவு நிலை சீராக இருக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் குழப்பமான சூழல் உருவாகலாம். தொழில் மற்றும் வேலைகளில் கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். கல்வி மற்றும் குழந்தைகள் தொடர்பான விஷயங்களில்…
உலகப் புகழ்பெற்ற தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பாபா வங்காவின் கணிப்புகள் இன்றளவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 1996 ஆம் ஆண்டு உயிரிழந்தாலும், உலகப் போர்கள், இயற்கைப் பேரழிவுகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்து அவர் கூறியதாக பரவிவரும் பல கணிப்புகள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. 9/11 தாக்குதல் முதல் செயற்கை நுண்ணறிவின் எழுச்சி வரை பல சம்பவங்களை அவர் முன்கூட்டியே கணித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், அடுத்த 100 ஆண்டுகளில் உலகில் நிகழக்கூடிய முக்கிய மாற்றங்கள் குறித்து பாபா வங்கா கூறியதாக பரவி வரும் தகவல்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. 2025 முதல் 2035 வரையிலான காலம் “கண்ணுக்குப் புலப்படாத கண்களின் காலம்” என விவரிக்கப்படுகிறது. இந்த காலத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பயோமெட்ரிக் கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மிக வேகமாக வளர்ச்சி அடையும் என கூறப்படுகிறது. முகஅடையாளம், இதயத் துடிப்பு கண்காணிப்பு போன்ற தொழில்நுட்பங்கள் பரவலாக…
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு எச்சரிக்கை நிலை ஏற்பட்டுள்ளது. ஆயுதத்துடன் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித் திரிந்த ஒருவரை கவனித்த அமெரிக்க ரகசிய சேவை அதிகாரி, அவசர சூழ்நிலையை முன்னிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மத்திய வாஷிங்டன் DC பகுதி உடனடியாக கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. வெள்ளை மாளிகை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் நடைபெற்ற இடத்தைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு வராமல் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாகக் கருதப்படும் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), முதல் முறையாக போட்டியிட்ட தேர்தலிலேயே கணிசமான வெற்றியைப் பதிவு செய்து அரசியலில் புதிய வரலாறு படைத்துள்ளது. முன்னதாக வெளியான கருத்துக் கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியைத் தொடரும் என சுட்டிக்காட்டியிருந்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது நிலைமை முற்றிலும் மாறி, தவெக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இறுதியில், 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்குத் தகுதியான நிலையை உருவாக்கியுள்ளது. தபால் வாக்குகள் எண்ணிக்கையின் தொடக்கத்தில் திமுக முன்னிலை வகித்தாலும், பின்னர் நிலைமைகள் வேகமாக மாறி தவெக முன்னிலை பெறத் தொடங்கியது. ஒரு கட்டத்தில், தவெக திமுகவை முந்தி முதன்மை இடத்தைப் பிடித்தது. தொடர்ந்து, அதிமுக மற்றும் திமுக இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு இடையில் மாறி…
2026ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், தமிழ்நாட்டில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பல தொகுதிகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், தேர்தல் முடிவுகள் குறித்து முன்னணி ஜோதிட நிபுணர்கள் வெளியிட்டிருந்த கணிப்புகளை மீண்டும் ஒரு முறை பார்ப்போம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜாதகத்தில், குரு பகவான் ஐந்தாம் இடத்திற்குப் பெயர்ச்சியாவது மிகச் சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது. இது திமுகவின் செல்வாக்கையும், அவரது தலைமைத்துவத்தையும் தக்கவைக்க உதவும் என்று ஜோதிடர்கள் கணித்திருந்தனர். இதன் காரணமாக, மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய்க்கு, குரு பகவான் அவரது ஜென்ம ராசியில் சஞ்சரிப்பது (ஜென்ம குரு) பெரும் மக்கள் ஆதரவையும், ஈர்க்கும்…
டெல்லி கேப்பிட்டல்ஸ் வேகப்பந்து வீச்சாளரான 31 வயதான கைல் ஜேமிசன், 15 வயதேயான வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்திய பின் வெளிப்படுத்திய ஆக்ரோஷமான கொண்டாட்டமும், ‘செண்ட்-ஓஃப்’ முறையும் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜேமிசன் வீசிய துல்லியமான இன்ஸ்விங்கிங் யார்க்கர், சூர்யவன்ஷியின் மட்டையின் நுனியில் பட்டு ஸ்டம்புகளைப் பதம் பார்த்தது. அதற்கு முந்தைய பந்தில் சூர்யவன்ஷி ஒரு பவுண்டரி விளாசியிருந்த நிலையில், அடுத்த பந்திலேயே அவரை வீழ்த்திய ஜேமிசன் மிகுந்த உற்சாகத்துடன் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். உலகச் சாதனைகளை எதிர்நோக்கிக் களமிறங்கிய சூர்யவன்ஷிக்கு இந்த ஆட்டமிழப்பு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. கீரன் பொல்லார்டின் சாதனையை முறியடித்து டி20 கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற பெயரைப் பெறவும், 20 வயதுக்குட்பட்ட பிரிவில் 100 சிக்ஸர்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைக்கவும் அவருக்கு இன்னும் ஒரு சிக்ஸர்…
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளால் சவூதி அரேபியாவின் ஒரே உத்தியோகபூர்வ மதுபான விற்பனை நிலையத்தில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரியாத்தின் இராஜதந்திரப் பகுதியில் பெயர் பலகை இல்லாமல் இயங்கும் இந்த விற்பனை நிலையம், 2024 ஆம் ஆண்டு முஸ்லிம் அல்லாத இராஜதந்திரிகளுக்காகத் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல் வசதி படைத்த முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுக் குடியிருப்பாளர்களுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டு முதல் சவூதியில் மதுபானங்களுக்குத் தடை இருந்தாலும், வெளிநாட்டவர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த ஒரு நிலையத்துக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய விநியோகத் தடையால் பியர், ஒயின் மற்றும் டெகிலா உள்ளிட்ட பானங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, அதிகம் அறியப்படாத அல்லது விலை உயர்ந்த பிராண்டுகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளதாக அங்கு சென்றவர்கள் தெரிவித்தனர். இதனால் நிலையத்தின் வெளியே நீண்ட வரிசைகள் காணப்படுவதோடு, பகல் நேரங்களிலேயே மதுபானங்களை வாங்க முற்படும் வெளிநாட்டவர்களிடையே…
ஜோதிட சாஸ்திரத்தில் ‘கிரகங்களின் இளவரசன்’ என்று போற்றப்படும் புதன் கிரகம், அறிவு, பேச்சுத்திறன், தொடர்பு மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றின் அதிபதியாகக் கருதப்படுகிறார். புதன் ஒவ்வொரு 23 முதல் 30 நாட்களுக்கும் ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். இந்தப் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான விளைவுகளை ஏற்படுத்தும். தற்போது, புதன் மீன ராசியில் நிலைகொண்டுள்ளார். இன்று (ஏப்ரல் 30) காலை 06:55 மணிக்கு, அவர் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கிறார். செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் மேஷ ராசியில் புதனின் இந்தப் பெயர்ச்சி, சில ராசிக்காரர்களுக்கு மகத்தான அதிர்ஷ்டத்தையும், ‘டபுள் ஜாக்பாட்’ வெற்றியையும் தேடித்தரும் என்று ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர். அந்த 4 ராசிகள் யாவை என்பதை இங்கு காணலாம். மேஷ ராசியினருக்குப் பிரம்மாண்ட நிதி ஆதாயம் மேஷ ராசியின் முதல் வீட்டில் (லக்கினத்தில்) இந்த புதன் பெயர்ச்சி நிகழ்வதால், இவர்களுக்கு அசாதாரணமான நன்மைகள் கிடைக்கும். கடன் கொடுத்த பணத்தை மீட்டெடுக்கலாம். சேமிப்பு எதிர்பார்த்த அளவுக்கு…