2026 ஆம் ஆண்டின் சனி ஜெயந்தி மே 16 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் சனி பகவானுக்குரிய சனிக்கிழமையிலேயே இந்த விழா வருவதுடன், பல அரிய யோகங்களும் ஒரே நாளில் உருவாகுகின்றன.
அதில் முக்கியமாக, ரிஷப ராசியில் சூரியன் மற்றும் புதன் இணைவதால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் ஜோதிட ரீதியாக மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. இந்த யோகம் அறிவு, தொழில் முன்னேற்றம், செல்வ வளர்ச்சி மற்றும் சமூக மரியாதையுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.
மேலும், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கேதார யோகமும் உருவாகுவதால், சில ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் அதிர்ஷ்டமானதாக அமையும் என கூறப்படுகிறது.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த புதாதித்ய ராஜயோகம் முதல் வீட்டில் உருவாகுவதால் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கலாம். நிதி நிலைமை சீராகி சேமிப்பு அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகளும் உருவாகலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் 10ஆம் வீட்டில் அமைவதால் தொழில் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். வெளிநாட்டு பயணங்கள் மற்றும் புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது.
மகர ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் 5ஆம் வீட்டில் உருவாகுவதால் உறவுகள் வலுப்பெறலாம். புதிய முயற்சிகள் வெற்றியடையும் சூழல் இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். பணியிடத்தில் தலைமைத்துவ திறன் வெளிப்படும். ஆன்மீக ஆர்வமும் அதிகரிக்கக்கூடும்.
இருப்பினும், ஜோதிட கணிப்புகள் அனைத்தும் நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய அடிப்படையிலானவை என்பதால், அவற்றை வழிகாட்டுதலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும் செய்திகள்



