அடுத்த 100 ஆண்டுகளில் உலகில் என்ன நடக்கும்? பாபா வங்கா கூறிய அதிர்ச்சி கணிப்புகள்

பாபா வங்கா

உலகப் புகழ்பெற்ற தீர்க்கதரிசிகளில் ஒருவராகக் கருதப்படும் பாபா வங்காவின் கணிப்புகள் இன்றளவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 1996 ஆம் ஆண்டு உயிரிழந்தாலும், உலகப் போர்கள், இயற்கைப் பேரழிவுகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலம் குறித்து அவர் கூறியதாக பரவிவரும் பல கணிப்புகள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.

9/11 தாக்குதல் முதல் செயற்கை நுண்ணறிவின் எழுச்சி வரை பல சம்பவங்களை அவர் முன்கூட்டியே கணித்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், அடுத்த 100 ஆண்டுகளில் உலகில் நிகழக்கூடிய முக்கிய மாற்றங்கள் குறித்து பாபா வங்கா கூறியதாக பரவி வரும் தகவல்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.

2025 முதல் 2035 வரையிலான காலம் “கண்ணுக்குப் புலப்படாத கண்களின் காலம்” என விவரிக்கப்படுகிறது. இந்த காலத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பயோமெட்ரிக் கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மிக வேகமாக வளர்ச்சி அடையும் என கூறப்படுகிறது. முகஅடையாளம், இதயத் துடிப்பு கண்காணிப்பு போன்ற தொழில்நுட்பங்கள் பரவலாக பயன்பாட்டிற்கு வரும் நிலையில், மக்களின் தனியுரிமை பெரும் சவாலுக்கு உள்ளாகலாம் என கணிக்கப்படுகிறது.

2035 முதல் 2045 வரை “டிஜிட்டல் தீர்க்கதரிசிகளின் காலம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலத்தில் செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் முடிவெடுப்புகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ச்சி அடையும் என கூறப்படுகிறது. ஆட்சி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் AI முக்கிய பங்கு வகிக்கும் சூழல் உருவாகலாம்.

2045 முதல் 2060 காலகட்டத்தில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தை நோக்கி பெரிய அளவிலான பயணங்களை மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது. பூமியில் அதிகரிக்கும் சவால்களுக்கு மாற்று தீர்வாக விண்வெளி குடியேற்ற முயற்சிகள் தீவிரமடையும் என இந்த கணிப்புகள் தெரிவிக்கின்றன.

2060 முதல் 2080 வரை மருத்துவ அறிவியல் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும் என கூறப்படுகிறது. ஆயுளை நீட்டிக்கும் சிகிச்சைகள் மற்றும் புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள் மனித வாழ்வில் புரட்சியை ஏற்படுத்தக்கூடும். இதனால் மரணம் குறித்த பார்வையே மாறக்கூடும் என கூறப்படுகிறது.

2080 முதல் 2095 வரை நகரங்களில் மக்கள் தொகை குறையும் சூழல் உருவாகலாம் என கணிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாற்றங்கள், தொழில்நுட்ப வாழ்க்கை முறை மற்றும் சமூக மாற்றங்கள் காரணமாக நகர்ப்புற வாழ்க்கை பெரிதும் மாறக்கூடும் என கூறப்படுகிறது.

2095 முதல் 2125 வரையிலான காலத்தில் “சுழல் நிகழ்வு” எனப்படும் மர்மமான மாற்றம் உலகில் நடைபெறக்கூடும் என பாபா வங்கா கூறியதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது மனித நாகரிகத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு முக்கிய திருப்பமாக இருக்கலாம் என கூறப்பட்டாலும், இதுகுறித்து தெளிவான விளக்கங்கள் வெளியாகவில்லை.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net