டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றால், இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதும் வாய்ப்பு உள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றில் தோல்வி இன்றி சூப்பர் 8க்கு முன்னேறி, தென்னாப்பிரிக்காவிடம் ஒரு தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளைத் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. குறிப்பாக, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 97* (50 பந்துகள்) ரன்கள் ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியாவின் பேட்டிங் ஸ்டார் வீரர்கள் சூர்யகுமார் யாதவ் (231 ரன்கள்) மற்றும் இஷான் கிஷன் முன்னிலையில் உள்ளனர். பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 12 விக்கெட்டுகளுடன் அசத்தி வருகிறார். இன்று இங்கிலாந்து வீரர்களைக் கட்டுப்படுத்த ‘மிஸ்டரி ஸ்பின்னர்’ வருண் பதிலாக அனுபவ வீரர் குல்தீப் யாத்வை இறக்கவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளைத் தோற்கடித்து அரையிறுதிக்கு வந்துள்ளது. ஹாரி புரூக் (228 ரன்கள்) மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் இந்தியாவுக்கு சவாலை ஏற்படுத்தக்கூடியவர்.
வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு பொதுவாக நல்லது எனக் கருதப்பட்டாலும், சமீபத்திய வெப்பநிலை மற்றும் மாலை நேர பனிப்பொழிவு (Dew factor) வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் உதவக்கூடும். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம்.
இந்திய அணியின் முக்கிய தகவல்கள் வான்கடே டி20
ஒட்டுமொத்த போட்டிகள்: 7
வெற்றிகள்: 5
தோல்விகள்: 2
வெற்றி சதவீதம்: சுமார் 71%
கடைசி தோல்வி: 2016 (மேற்கிந்திய தீவுகள் எதிர்)
உத்தேச லெவன்
இந்தியா: சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (C), ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங்/ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்/வருண் சக்கரவர்த்தி
இங்கிலாந்து: பில் சால்ட், ஜோஸ் பட்லர், வில் ஜாக்ஸ், ஹாரி புரூக் (C), லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், ஜேமி ஓவர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், ரீஸ் டாப்லி




