ரோகித் சர்மா உடல் பருமன் குறித்து வெளியான கருத்தால் சர்ச்சை

பகிர்
WhatsApp Google News Facebook Post Telegram

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் அரையிறுதி சுற்று போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.

இந்த நிலையில், ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளதுடன், இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஷமா முகமது எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ரோகித் சர்மா உடல் பருமன்
படம்: ரோகித் சர்மா உடல் பருமன் குறித்து வெளியான கருத்தால் சர்ச்சை

ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அவர் தனது பதிவில் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து, சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ரோகித் சர்மா குறித்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்திய அரசியலில் தோல்வியடைந்த பிறகு ராகுல் காந்தி இப்போது கிரிக்கெட் விளையாடுவார் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? இவர்களது கருத்து அவசரகால மன நிலையை பிரதிபலிக்கிறது. காங்கிரஸ் விமர்சனத்தை நான் கேள்வி கேட்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது, ரோகித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

மூலம்: Colombo Tamil · திருத்தம் வேண்டுமா? எங்களுக்குத் தெரிவிக்கவும்