Connect with us
Thursday, May 7, 2026
Home » இந்திய கிரிக்கெட் » கம்பீர் முகத்தில் புன்னகையை பார்த்ததும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம்: சூர்யகுமார் யாதவ்
Advertisement

கம்பீர் முகத்தில் புன்னகையை பார்த்ததும் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம்: சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றிக்காக இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து சூர்யகுமார் யாதவ் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

முதன்முறையாக அவருடன் இணைந்து அணியை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை செய்தபோது, இருவரும் பரிந்துரைத்த 15 வீரர்களில் 14 பேரின் பெயர்கள் ஒரே மாதிரியாக இருந்ததாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இருவரின் சிந்தனையும் அணுகுமுறையும் ஒரேபோல் இருப்பதை புரிந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

“கோலி, ரோஹித், நான் இருந்திருந்தால்…” வாங்கிக் கட்டிய அஸ்வின்… கவாஸ்கர் சொன்ன வார்த்தை“கோலி, ரோஹித், நான் இருந்திருந்தால்…” வாங்கிக் கட்டிய அஸ்வின்… கவாஸ்கர் சொன்ன வார்த்தை

இலக்குகள் தெளிவாக இருக்கும் போது தேவையற்ற விவாதங்களுக்கு இடமில்லை என்றும், ஆலோசனைகள் மட்டுமே நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் கவுதம் கம்பீரை தாம் செல்லமாக “கவுத்தி பாய்” என்று அழைப்பதாகவும், அது ஒரு அண்ணன் – தம்பி உறவைப் போன்றது என்றும் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டியின் போது கம்பீரை சிரிக்க வைக்க பலமுறை முயற்சித்ததாகவும், ஆனால் போட்டிகள் மிகவும் தீவிரமாக இருந்ததால் அது சாத்தியமாகவில்லை என்றும் அவர் கூறினார்.

ஆனால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கம்பீரின் முகத்தில் புன்னகையை பார்த்ததும், அணியிலிருந்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மெகா சாதனை.. சுப்மன் கில் சாதனையை படைத்த கமிந்து மென்டிஸ்டெஸ்ட் கிரிக்கெட்டில் மெகா சாதனை.. சுப்மன் கில் சாதனையை படைத்த கமிந்து மென்டிஸ்

Advertisement
To Top