கனடாவின் யார்க் பிராந்தியத்திலுள்ள ரிச்ச்மண்ட் ஹில்லில் ஒரு வீட்டின் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடு கடந்த நவம்பர் மாதத்திலும் இதே போன்ற தாக்குதலுக்கு இலக்காகியிருந்தது.
பொலிஸார் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தில் எவருக்கும் உயிர் அல்லது உடல் காயம் ஏற்படவில்லை என்றும், சம்பவ நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளனர். ஆனால், குறிப்பிடத்தக்க அளவில் சொத்து சேதமடைந்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஒரு சாம்பல் நிற ஹோண்டா SUV வாகனத்தில் இருந்து குறைந்தது இரு அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் செயல்பட்டிருக்கலாம் என பொலிஸ் குறிப்பிட்டு, அவர்களை தீவிரமாக தேடி வருவதாக அறிவித்துள்ளனர்.

