ஹிந்தி படத்தில் நடிக்கும் ஃபஹத் பாசில்!

Ranbir Kapoor and Fahadh Faasil in Courtroom Drama

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசில் தமிழில் நடித்திருந்த விக்ரம் மற்றும் புஷ்பா அகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன.

சமீபத்தில் ஆவேஷம் திரைப்படம் பிளாக்பஸ்டராகி 150 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், தென்னிந்திய மொழிகளில் அறியப்படும் நடிகராக இருக்கும் ஃபஹத் தற்போது இந்தி சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

இயக்குனர் இம்தியாஸ் அலி இயக்கும் ’இடியட் ஆஃப் இஸ்தான்பூல்’ என்ற படத்தில் ஃபஹத் நடிக்கவுள்ளதுடன், மற்றொரு இந்தி படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்கும் படத்தில் ஃபஹத் பாசிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படம் நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ஒரு த்ரில்லர் திரைப்படமாகும்.

Advertisement