Connect with us
Tuesday, April 21, 2026

மோடியை கட்டி அணைக்க போன இஸ்ரேல் பிரதமரின் மனைவி.. நெதன்யாகு என்ன சொன்னார் தெரியுமா?

இஸ்ரேல் பிரதமரின் மனைவி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக Israel சென்றார். Tel Aviv நகரில் அவர் வந்தடைந்தபோது, அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில், இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu மற்றும் அவரது மனைவி Sara Netanyahu நேரில் சென்று மோடியை வரவேற்றனர். விமானத்திலிருந்து இறங்கியதும், நெதன்யாகு புன்னகையுடன் மோடியை அணைத்து வரவேற்றார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கைக்குலுக்கி உரையாடினர்.

அதன்பின் சாரா நெதன்யாகு, மேற்கத்திய மரபுப்படி மோடியை அணைத்து வரவேற்க முனைந்தார். ஆனால், அதனை கவனிக்காமல் இருந்த மோடி உடனே கையை நீட்டி கைக்குலுக்கினார். பின்னர் இருவரும் நலம் விசாரித்து சிரிப்புடன் உரையாடினர். “எப்படி இருக்கிறீர்கள், சாரா?” என்று மோடி உற்சாகமாக கேட்டதாகக் கூறப்படுகிறது.

கல்லூரி மாணவியை 2 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பேராசிரியர் கைதுகல்லூரி மாணவியை 2 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பேராசிரியர் கைது

இந்த தருணத்தில் இன்னொரு சுவாரசிய அம்சமும் கவனத்தை ஈர்த்தது. சாரா நெதன்யாகு காவி நிற ஆடை அணிந்திருந்தார். அதேபோல், மோடியும் அணிந்திருந்த கோட்டின் பாக்கெட்டில் இருந்த ‘பாக்கெட் ஸ்கொயர்’ காவி நிறத்தில் இருந்தது. இதைக் கவனித்த நெதன்யாகு, “நீங்கள் இருவரும் ஒரே நிறத்தில் வந்துள்ளீர்கள் போல!” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். அதற்கு சிரித்துக்கொண்டே மோடி, “ஆமாம், நாங்கள் காவி நிறத்தில் வந்திருக்கிறோம்” என்று பதிலளித்தார்.

இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையேயான நட்பு மனப்பான்மை அங்கு இருந்த அதிகாரிகளையும் கவர்ந்தது. இந்த வரவேற்பு காட்சியின் வீடியோவை நெதன்யாகு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “Welcome my dear Modi” என பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

To Top