2025 ஆம் ஆண்டு முதல், கனடாவில் “நடுத்தர வர்க்க வரி குறைப்பு” என்ற புதிய வரி சலுகை நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட இந்த மாற்றத்தின்படி, ஆண்டு வருமானம் 57,375 கனடிய டாலருக்கு குறைவாக உள்ள தனிநபர்களுக்கான வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
2025 வரி ஆண்டிற்கு இந்த விகிதம் 14.5% ஆகவும், 2026 முதல் 14% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த வரி விகிதம் 15% ஆக இருந்தது. மத்திய அரசின் மதிப்பீட்டின்படி, இந்த மாற்றத்தால் சுமார் 22 மில்லியன் கனடியர்கள் பயன் அடைவார்கள்.
ஒரு தனி நபருக்கு அதிகபட்சம் 420 டாலரும், இருவர் வருமானம் பெறும் குடும்பத்திற்கு 840 டாலரும் வரி சேமிப்பாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு இடையே, குறைந்த மற்றும் நடுத்தர வருமான குடும்பங்களின் பொருளாதார சுமையை இது குறைக்கும் என கனடிய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்





