Connect with us
Tuesday, April 21, 2026

ரூ.14.2 கோடிக்கு கார்த்திக் சர்மா – சிஎஸ்கே கண்டெடுத்த ‘அடுத்த தோனி’?

Karthik Sharma for Rs. 14.2 crore

Indian Premier League 2026ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில், யாரும் எதிர்பாராத வகையில் Chennai Super Kings அணி இளம் வீரர்களை குறிவைத்து தைரியமான முதலீடுகளை செய்து வருகிறது.

ராஜஸ்தானை சேர்ந்த 19 வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கார்த்திக் சர்மா பெயர் ஏலத்தில் வந்ததும், சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் கடும் போட்டியில் இறங்கின. இறுதியில் அடிப்படை விலை ரூ.35 லட்சமாக இருந்த கார்த்திக் சர்மாவை சிஎஸ்கே அணி ரூ.14 கோடியே 20 லட்சம் செலுத்தி கைப்பற்றியது. இந்த தொகை, ஏல அரங்கில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

2025–26 சையது முஸ்தாக் அலி தொடரில் கார்த்திக் சர்மா ஐந்து இன்னிங்ஸ்களில் 133 ரன்கள் எடுத்தார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 160 ஆக இருந்தது. குறிப்பாக கர்நாடகாவுக்கு எதிராக 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த இன்னிங்ஸ், அவரது ஆக்கிரமிப்பு திறனை வெளிப்படுத்தியது. அவரது சிக்ஸர் அடிக்கும் திறனை முன்னாள் வீரர்களான பீட்டர்சன், அஸ்வின் ஆகியோர் வெளிப்படையாக பாராட்டியுள்ளனர்.

அல்சாரி ஜோசப்பை தாண்டி மோசமான சாதனை – டி20-இல் புதிய வரலாறு படைத்த அர்ஷ்தீப் சிங்அல்சாரி ஜோசப்பை தாண்டி மோசமான சாதனை – டி20-இல் புதிய வரலாறு படைத்த அர்ஷ்தீப் சிங்

ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே 115 பந்துகளில் 113 ரன்கள் எடுத்த கார்த்திக் சர்மா, 50 ஓவர் கிரிக்கெட்டிலும் தனது திறனை நிரூபித்துள்ளார். தனது முதல் உள்நாட்டு 50 ஓவர் போட்டியில் 90 பந்துகளில் 123 ரன்கள் குவித்தார். 2024–25 விஜய் ஹசாரே தொடரில் 9 போட்டிகளில் 445 ரன்கள் எடுத்த அவர், சராசரி 55 என்ற சிறப்பான நிலையை பெற்றார். இதில் இரண்டு சதங்களும், இரண்டு அரை சதங்களும் அடங்கும்.

தற்போது கார்த்திக் சர்மா, தீபக் சாகர் நடத்தி வரும் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். அவரது ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் ஐபிஎல் அணிகளின் கவனத்தை மேலும் ஈர்த்ததாக கூறப்படுகிறது. ஏலத்திற்கு முன்பே சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி, டெல்லி உள்ளிட்ட அணிகள் அவரை பயிற்சி சோதனைக்கு அழைத்திருந்தன.

இதுவரை உள்ளூர் டி20 போட்டிகளில் 12 ஆட்டங்களில் விளையாடி 334 ரன்கள் எடுத்துள்ள கார்த்திக் சர்மா, எதிர்கால இந்திய கிரிக்கெட்டின் பெரிய நம்பிக்கையாக பார்க்கப்படுகிறார். சிஎஸ்கே இவ்வளவு பெரிய தொகை செலுத்தி அவரை எடுத்துள்ள நிலையில், ரசிகர்கள் இவரை ‘அடுத்த MS Dhoni’ என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், அவருக்கு தனிப்பட்ட முறையில் ஆர்சிபி அணி மீது விருப்பம் இருப்பதாகவும் பேசப்படுகிறது. இது ரசிகர்களிடையே மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026: இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி விடுத்துள்ள எச்சரிக்கைடி20 உலகக்கோப்பை 2026: இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி விடுத்துள்ள எச்சரிக்கை

To Top