வளைகுடா நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

வளைகுடா

சவுதி அரேபியா மற்றும் ஏமன் கிளர்ச்சியாளர்கள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில், வளைகுடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அவசரப் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிநவீன ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக எந்த நேரத்திலும் வான்வெளி மூடப்பட்டு விமானப் போக்குவரத்து முடங்கும் அபாயம் நிலவுவதால், சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட 11 நாடுகளில் இயங்கும் அமெரிக்கத் தூதரகங்கள் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளன.

ஈரான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளால் அமெரிக்கர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏற்கனவே வளைகுடா நாடுகளில் தங்கியுள்ள அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement