மும்பை வந்தடைந்த கால்பந்தின் ‘பாட்ஷா’ மெஸ்ஸி – சச்சின், கோலியை சந்திக்கிறார்

மும்பை வந்தடைந்த கால்பந்தின் பாட்ஷா மெஸ்ஸி சச்சின் கோலியை சந்திக்கிறார்

உலகப் புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, தனது இந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது மும்பை வந்து இறங்கியுள்ளார். “தி கோட்” என ரசிகர்களால் அழைக்கப்படும் மெஸ்ஸி, இந்த சுற்றுப்பயணத்தின் போது கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

நேற்று கொல்கத்தாவில் ரசிகர்களை சந்திக்க மைதானத்திற்கு வந்த மெஸ்ஸியின் நிகழ்ச்சியில் ஏற்பாட்டு குறைபாடுகள் காணப்பட்டன. இதன் காரணமாக அவர் அந்த நிகழ்ச்சியை பாதியிலேயே விட்டு வெளியேறினார். இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் மைதானத்தில் குழப்பத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் சென்ற மெஸ்ஸிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், நிகழ்ச்சி ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. அங்கு ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம்வில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெஸ்ஸி மற்றும் ரேவந்த் ரெட்டி இணைந்து கால்பந்து விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியையும் மெஸ்ஸியை சந்தித்து உரையாடினார்.

மும்பை வந்தடைந்த கால்பந்தின் பாட்ஷா மெஸ்ஸி சச்சின் கோலியை சந்திக்கிறார்

இந்த சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளாக இன்று மும்பை வந்துள்ள மெஸ்ஸி, மாலை 4 மணியளவில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷாருக்கான் ஆகியோரை சந்திக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு பாலிவுட் நட்சத்திரங்களுடன் இணைந்து நட்புறவு கால்பந்து போட்டியிலும் அவர் பங்கேற்க உள்ளார்.

இரவு நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், 2022ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி வென்ற போது அவர் பயன்படுத்திய ஜெர்சி ஏலத்தில் விடப்பட உள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரசிகர்களுடன் தனிப்பட்ட புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் மெஸ்ஸி ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அதற்காக 10 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் ஏற்பட்ட குறைபாடுகளை கருத்தில் கொண்டு, மும்பையில் நிகழ்ச்சிகள் எந்த தடையும் இல்லாமல் நடைபெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மெஸ்ஸி நாளை திங்கட்கிழமை டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மும்பை வந்தடைந்த கால்பந்தின் பாட்ஷா மெஸ்ஸி சச்சின் கோலியை சந்திக்கிறார்

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net