கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான உறவை பகிரங்கமாக உறுதிப்படுத்திய கேத்தி பெர்ரி

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2023-ஆம் ஆண்டு தனது மனைவி சோபி கிரிகோவுடனான திருமணத்தை முடித்துக் கொண்டார். அதன் பிறகு, அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரியுடன் அவர் உறவு வளர்த்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. ஆனால், அந்த உறவு குறித்து இருவரும் அப்போது எந்த கருத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், கேத்தி பெர்ரி, இன்ஸ்டாகிராம் மூலம் ஜஸ்டின் ட்ரூடோவுடனான உறவை பகிரங்கமாக உறுதிப்படுத்தியுள்ளார். இருவரும் சமீபத்தில் ஜப்பானுக்கு ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படத்தை கேத்தி பெர்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் உள்ள வீடியோவில், இருவரும் ஒன்றாக உணவு உண்ணும் காட்சிகள், நகர்ப்புறங்களில் சுற்றும் தருணங்கள், மற்றும் உற்சாகமாக நேரத்தைச் செலவிடும் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பதிவுக்கு, “டோக்கியோ சுற்றுப்பயண நேரங்கள்” (Tokyo Travel Moments) என்று அவர் தலைப்பிட்டுள்ளார்.

இந்த பகிர்வு, அவர்களது உறவு இனி மறைக்கப்படாமல், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதை உணர்த்துகிறது. ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் இந்த இனிய தருணங்களை வரவேற்று, பல கருத்துகளையும், ஆசிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net