மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் உலக சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
லாகூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் முன் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். நடுவரிசையில், டிவால்ட் பிரவீஸ் 16 பந்துகளில் 25 ரன்களும், டோனோவன் ஃபெராரியா 15 ரன்களும் எடுத்தனர். முடிவில், தென்னாப்பிரிக்கா அணி 19.2 ஓவரில் 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பாகிஸ்தான் பந்துவீச்சில், ஃபகீம் அஷ்ரப் நான்கு விக்கெட்டுகளையும், சல்மான் மிர்சா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர் ஃபர்கான் 28 ரன்கள் எடுத்தார். மற்றொரு வீரரான சைம் அயூப் 38 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். இதில் ஆறு பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்கும். பாபர் அசாம் 18 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார் (இதில் ஒரு பவுண்டரி அடங்கும்). இதன் மூலம், பாகிஸ்தான் அணி 13.1 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
சாதனை விவரங்கள்
இந்த வெற்றியின் போது, பாபர் அசாம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
பாபர் அசாம் இந்த இலக்கை 123 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை வைத்திருந்த ரோகித் சர்மா, 151 இன்னிங்ஸில் 4231 ரன்கள் அடித்திருந்தார்.
தற்போது மூன்றாவது இடத்தில் உள்ள விராட் கோலி, 117 இன்னிங்ஸில் 418 ரன்கள் அடித்திருக்கிறார்.
வீரர்களின் சராசரியைக் ஒப்பிடுகையில்: விராட் கோலியின் சராசரி 48 என்ற அளவில் உள்ளது. பாபர் அசாமின் சராசரி 39 என்ற அளவில் உள்ளது. ரோகித் சர்மாவின் சராசரி 32 என்ற அளவில் உள்ளது.
எனினும், இந்த முதல் மூன்று வீரர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரராக ரோஹித் சர்மா விளங்குகிறார்.
அண்மையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் பாபர் அசாம் அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் அணிக்கு திரும்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்





