125 ரன்களுக்கு ஆல் அவுட்! நம்பர் 1 இந்தியாவை அசால்ட்டாக சாய்த்த ஆஸி! டி20 வரலாற்றில் இந்தியாவுக்கு 2வது மோசமான தோல்வி!

இந்தியா

மெல்போர்ன், அக்டோபர் 31: ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு, டி20 தொடரின் ஆரம்பமும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. மழையால் முதல் போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இப்போட்டியில் இந்தியா சந்தித்த தோல்வி, டி20 வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் 2வது மோசமான தோல்வியாகப் பதிவாகியுள்ளது.

இந்திய அணியின் திணறல் பேட்டிங்: ஹேசில்வுட் ஹாட்ரிக்!

இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச தீர்மானித்தது. களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.

சுப்மன் கில் 5 (10) ரன்களில் ஜோஷ் ஹேசில்வுட் வேகத்தில் அவுட்டானார்.
சஞ்சு சாம்சன் 2 ரன்னில் நடையைக் கட்டினார். கேப்டன் சூரியகுமார் யாதவ் 1 ரன்னில் காலி செய்யப்பட்டார். ஹேசில்வுட் தனது அடுத்த விக்கெட்டாக திலக் வர்மாவை டக் அவுட்டாக்கி இந்தியாவை பெரும் சரிவுக்குள் தள்ளினார். இதனால் இந்தியா 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

மறுமுனையில் மற்றொரு துவக்க வீரரான அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி நம்பிக்கை அளித்தார். ஆனால், அக்சர் படேல் 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். அடுத்து வந்த ஹர்ஷித் ராணா அதிரடியாக விளையாட முயற்சித்த போதிலும் 33 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அடுத்து வந்த சிவம் துபேவும் 4 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் தனி ஒருவனாகப் போராடிய அபிஷேக் சர்மா 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 37 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் அவுட்டானதும், இந்திய அணி 18.4 ஓவர்களில் வெறும் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் சேவியர் பார்லெட் 2, நாதன் எலிஸ் 2 மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவை மிரட்டினர்.

125 ரன்களுக்கு ஆல் அவுட்

ஆஸ்திரேலியாவின் அசால்ட் வெற்றி: புதிய மோசமான சாதனை!

நம்பர் ஒன் டி20 அணி என்று கருதப்படும் இந்தியாவை 150 ரன்களைக் கூட தொடாமல் ஆஸ்திரேலியா சுருட்டியது குறிப்பிடத்தக்கது. 126 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியா 13.2 ஓவர்களிலேயே 126/6 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

© 2026 Colombo Tamil | All rights reserved | Made With By WebpressHub.net