Connect with us
Saturday, March 28, 2026

’24 மணி நேரமும் அதனை செய்ய விருப்பமில்லை ’ – நடிகை சோபிதா துலிபாலா

சோபிதா துலிபாலா

பிரபல தெலுங்கு நடிகையான சோபிதா துலிபாலா, சமீபத்தில் நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு அவர் ஊடகங்களின் கவனத்திலிருந்து சற்றே விலகி, அமைதியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின்னர், சோபிதா ஒரு தெலுங்கு வெப் தொடரில் நடித்துள்ளார். அதேபோல், தமிழில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் வெட்டுவம் படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் சோபிதா தனது தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட எண்ணங்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார். எப்போதும் செய்திகளில் இடம்பெற வேண்டும் என்றோ, தொடர்ச்சியாக கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றோ தனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறினார். “என்னைப் பற்றி 24 மணி நேரமும் பேசப்பட வேண்டும் என்பதையும் நான் விரும்பவில்லை” என்று அவர் நேர்மையாக தெரிவித்தார்.

‘துருவ நட்சத்திரம்’ வரை இனி எந்த படமும் இல்லை: பரபரப்பை ஏற்படுத்திய கெளதம் மேனன்‘துருவ நட்சத்திரம்’ வரை இனி எந்த படமும் இல்லை: பரபரப்பை ஏற்படுத்திய கெளதம் மேனன்

மேலும், தன்னுடைய வாழ்க்கையில் என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்பதில் தெளிவாக இருப்பதாகவும், மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை விட தன்னுடைய மனதுக்குப் பிடித்த பாதையையே தேர்ந்தெடுத்து பயணிப்பதாகவும் சோபிதா கூறினார். புகழ் மற்றும் வெளிச்சம் மட்டுமே வெற்றியின் அடையாளம் அல்ல என்றும், தனிப்பட்ட அமைதியும் சுய திருப்தியும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கருத்துகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

To Top